இரிடியம்(IV) ஆக்சைடு
இரிடியம்(IV) ஆக்சைடு (Iridium(IV) oxide) என்பது IrO2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டுள்ள ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதுவே இரிடியத்தின் நன்கு அறியப்பட்டதும் வரையருக்கப்பட்டதுமான ஆக்சைடு சேர்மமாகும். இதனுடைய படிகவடிவம் ஆறு ஆயங்கள் இரிடியமும் மூன்று ஆயங்கள் ஆக்சிசனையும் கொண்டு, தைட்டானியம் ஈராக்சைடின் உரூத்தைல் படிகவமைப்பைக் கொண்டுள்ளது[1]. மற்ற அரிய ஆக்சைடுகளுடன் இரிடியம்(IV) ஆக்சைடைச் சேர்த்து தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் மின்னாற்பகுத்தல் வினைகளில் நேர்மின் முனை வாய்களில் பூசுவதற்குப் பயன்படுகிறது. மின் உடலியங்கியல் ஆய்வுகளுக்குப் பயனாகும் நுண்மின்முனைவாய்களிலும் இரிடியம்(IV) ஆக்சைடு பயன்படுகிறது[2]. இரிடியம் உலோகத்தின் இறுதிநிலை வடிவமாகப் பிரித்தெடுக்கப்பட்ட இரிடியத் துகளை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாக இரிடியம்(IV) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia