இலங்கையின் நீதித்துறை
இலங்கையின் நீதித்துறை (Judiciary of Sri Lanka) என்பது இலங்கையில் நீதி நிர்வாகத்திற்குப் பொறுப்பான குடிமை, குற்றவியல் நீதிமன்றங்கள் ஆகும். இலங்கையின் அரசியலமைப்பு நீதிமன்றங்களை பாரம்பரிய அதிகாரப் பிரிவினைக் கட்டமைப்பிற்குள் சுயாதீனமான நிறுவனங்கள் என்று வரையறுக்கிறது. இவை ஆங்கில பொதுச் சட்டம், உரோமன்-டச்சு குடிமைச் சட்டம், மற்றும் மரபுசார் சட்டம் ஆகியவற்றின் கலவையான இலங்கைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றன; மேலும் அவை இலங்கை நாடாளுமன்றத்தின் 1978 ஆம் ஆண்டு எண் 02 நீதித்துறைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன.[1] நீதித்துறையில் மீயுயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம், முதன்மை நீதிமன்றங்கள் ஆகியவை உள்ளன. கடுமையான குற்றங்களுக்கான விசாரணைகளை ஒரு நடுவர் மன்றத்தின் முன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்தாலும், தற்போது அனைத்து வழக்குகளும் தொழில்முறை நீதிபதிகள் முன் விசாரிக்கப்படுகின்றன.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia