இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு
இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு (Lanthanum ytterbium oxide) என்பது LaYbO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனம், இட்டெர்பியம்]] மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து ஒரு திண்மப் பொருளாக இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு உருவாகிறது. பெரோவ்சிகைட்டு கட்டமைப்பை இந்த சேர்மம் ஏற்றுக்கொள்கிறது. தயாரிப்புஇலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு இயற்கையாகத் தோன்றும் ஒரு கனிமமல்ல. ஆனால் 1200 ° செல்சியசு வெப்பநிலையில் இலந்தனம் ஆக்சைடையும் இட்டெர்பியம்(III) ஆக்சைடையும் சேர்த்து திண்மநிலை வினைக்கு உட்படுத்தினால் இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடை தயாரிக்கலாம். LaYbO3 சேர்மத்தின் ஒற்றை-படிகங்களை 750 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகிய ஐதராக்சைடு இளக்கியை மூடப்பட்ட வெள்ளி குழாய்களில் இட்டு படிக வளர்ச்சி முறையில் வளர்க்கலாம்.[1] அதிர்வூட்டப்பட்ட சீரொளி படிவு மூலமும் மென்படலங்களாக இச்சேர்மத்தை கட்டமைக்கலாம். கட்டமைப்புLaYbO3 மற்றும் பிற LaREO3 ஆக்சைடுகள் (RE=Ho, Y, Er, Tm, Yb மற்றும் Lu) சேர்மங்கள் Pnma என்ற இடக்குழுவில் விவரிக்கப்பட்டுள்ள உள் சமச்சீர்மையுடன் செஞ்சாய்சதுரப் படிக அமைப்பைக் கொண்டுள்ளன. எதிரெதிர் இடமாற்றம் செய்யப்பட்ட La3+ அயனிகளும் கிளேசர் குறியீட்டு முறையின்படி a−b+a− உள்ளமைவில் சாய்ந்திருக்கும் சற்று உருக்குலைந்த YbO6 என்முகமுமாக இக்கட்டமைப்பை விவரிக்க முடியும். YbO6 என்முக சுழற்சியானது La இன் ஒருங்கிணைப்பு எண்ணை 12 இலிருந்து 8 ஆகக் குறைக்கிறது. இதனால் a மற்றும் b அச்சுகளில் எதிர்மறையான வெப்ப விரிவாக்கமும் வெளிப்படுகிறது. இயற்பியல் பண்புகள்இலந்தனம் இட்டெர்பியம் ஆக்சைடு அறைவெப்ப நிலையில் மின் தற்கோள் திறனை வெளிப்படுத்துகிறது. ~26 என்ற இம்மதிப்பு 10 கெல்வின் வெப்பநிலையில் 25 ஆக சிறிதளவு குறைகிறது. LaYbO3 2.7 கெல்வின் வெப்பநிலையில் பலவீனமான பெரோ காந்தத்துடன் எதிர்காந்த வரிசையை காட்டும்.[2] LaYbO3 அடிப்படையிலான பெரோவ்சுகைட்டுகள் இடைநிலை வெப்பநிலையில் (600-800 °செல்சியசு) புரோட்டான் கடத்துத்திறனைக் காட்டுவதாகவும் அறியப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia