இலந்தனம் கார்பனேட்டு
இலந்தனம் கார்பனேட்டு (Lanthanum carbonate) என்பது La2(CO3)3, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இது இலந்தனம் (III) நேர்மின் அயனிகளும் கார்பனேட்டு எதிர்மின் அயனிகளும் சேர்ந்து உருவாகும் சேர்மமாகும். தாதுப்பொருளாகும். இலந்தனம் கார்பனேட்டு, மோனசைட் என்ற கனிமத்துடன் சேர்ந்து இலந்தனத்தின் கனிமப்பொருளாகக் காணப்படுகிறது. இலந்தனத்தின் வேதியியல்இலந்தனத்தின் சேர்மங்கள் வரிசையின் தொடக்கம் இலந்தனம் கார்பனேட்டின் வழியாகத்தான் தொடங்குகிறது. குறிப்பாக இலந்தனம் கலப்பு ஆக்சைடுகள் உருவாதல் குறிப்பிடப்படுகிறது.
மனிதன் மற்றும் கால்நடை மருந்துபாசுபேட் பிணைப்பி என்ற மருந்தாக இலந்தனம் கார்பனேட்டு பயன்படுகிறது. சியர் மருந்து நிறுவனம் இதைப் பெருமளவில் தயாரித்து போசிரெனால் என்ற வர்த்தகப் பெயரில் மருந்தளிக்கும் மருத்துவத்திற்காக விற்பனை செய்கிறது[1]. இம்மருந்துகள் அளவில் பெரியனவாக இருப்பதால் ( 1000 மி.கி , குறுக்களவு 2.2 செ.மீ) வாயிலிட்டு அசைபோடாமல் விழுங்க நினைத்தால் தொண்டையில் அடைத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. குருதிபாசுபேட்மிகை நோய்க்காகவும் தொடக்கநிலை சிறுநீரக நோய்களுக்காகவும் இம்மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. உணவுடன் இம்மருந்தை எடுத்துக்கொள்வதால், சிறுகுடலால் பாசுபேட் மேலும் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. விலங்குகளுக்கு உண்டாகும் குருதிபாசுபேட்மிகை நோய்க்காக பேயர் விலங்குகள் நலம் அமைப்பு இம்மருந்தை ரெனாட்சின் [2] என்ற வனிகப்பெயரால் தயாரித்து விற்பனை செய்கிறது. குருதிபாசுபேட்மிகை நோய்க்காக இலந்தனம் கார்பனேட்டை பயன்படுத்தினாலும் அதனால் விளையும் பக்கவிளைவுகளான தசைவலி, தசைப்பிடிப்பு மற்றும் புறநிலை நீர்க்கோப்பு முதலானவை மருத்துவ அடிப்படையில் கவனிக்கப்படல் வேண்டும்[3] பிற பயன்கள்கண்ணாடிகளுக்குச் சாயமேற்றல், தண்ணீரை நன்னீராக்கல் அல்லது ஐதரோ கார்பன்களை பிளக்கும் வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுதல் போன்ற பலவிதமான பயன்பாடுகளுக்கும் இலந்தனம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia