இலந்தனம் நைட்ரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அச்சனைலிடின்லந்தனம்
வேறு பெயர்கள்
இலந்தனம் மோனோநைட்ரைடு, இலந்தனம்(III) நைட்ரைடு
இனங்காட்டிகள்
25764-10-7
ChemSpider
105115
EC number
247-245-1
InChI=1S/La.N Key: QCLQZCOGUCNIOC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
117627
பண்புகள்
La N
வாய்ப்பாட்டு எடை
152.91 g·mol−1
தோற்றம்
கருப்பு நிறத் தூள்
அடர்த்தி
6.73 கி/செ.மீ3
உருகுநிலை
2,450 °C (4,440 °F; 2,720 K)
கரையாது
தீங்குகள்
GHS pictograms
GHS signal word
எச்சரிக்கை
H315 , H319 , H335
வார்ப்புரு:PPhrases
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
இலந்தனம் நைட்ரைடு (Lanthanum nitride ) என்பது LaN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . இலந்தனமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[ 1] [ 2]
தயாரிப்பு
நைட்ரசனும் இலந்தனம் முந்நைட்ரைடும் சேர்ந்து சேர்ந்து வினைபுரிவதால் இலந்தனம் நைட்ரைடு உருவாகிறது.
2LaH3 + N2 -> 2LaN + 3H2
இலந்தனம் முந்நைட்ரைடு அம்மோனியாவுடன் வினையில் ஈடுபட்டாலும் இலந்தனம் நைட்ரைடு உருவாகிறது.:[ 3]
LaH3 + NH3 -> LaN + 3H2
இலந்தனம் இரசக்கலவையும் நைட்ரசனும் வினைபுரிந்தாலும் இலந்தனம் நைட்ரைடு உருவாகிறது:[ 4]
2La + N2 → 2LaN
இயற்பியல் பண்புகள்
இலந்தனம் நைட்ரைடு கருப்பு நிறத்தில் தூளாக உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது.[ 1] அவற்றின் படிகங்கள் Fm3m இடக்குழுவில் கனசதுர படிக அமைப்பில் உள்ளன.[ 5]
இலந்தனம் நைட்ரைடு இணைகாந்தப் பண்பைக் கொண்டுள்ளது.
வேதிப்பண்புகள்
இலந்தனம் நைட்ரைடு காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் நீருடன் வினைபுரிகிறது:
LaN + 3H2 O → La(OH)3 + NH3
அமிலங்களுடனும் இது வினைபுரிகிறது:
LaN + 4HCl → LaCl3 + NH4 Cl
பயன்கள்
ஒளி உமிழும் குழல் பொருள், காந்தப் பொருள், குறைக்கடத்தி , உயர்வெப்பமேற்கும் பொருள், சாயம் , வினையூக்கி என இலந்தனம் நைட்ரைடு பலவிதங்களாகப் பயன்படுத்தப்படுகிறது.[ 6] [ 7]
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "Lanthanum Nitride" (in ஆங்கிலம்). American Elements . Retrieved 8 February 2024 .
↑ Derz, Friedrich W. (18 May 2020). H-Z (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG . p. 1179. ISBN 978-3-11-232209-3 . Retrieved 8 February 2024 .
↑ Foster, L. S. (1945). The Preparation of Crucibles from Nitrides (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission. Technical Information Service. p. 8. Retrieved 8 February 2024 .
↑ Young, R. A.; Ziegler, W. T. (November 1952). "Crystal Structure of Lanthanum Nitride 1,2" (in en). Journal of the American Chemical Society 74 (21): 5251–5253. doi :10.1021/ja01141a004 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0002-7863 . https://pubs.acs.org/doi/pdf/10.1021/ja01141a004 . பார்த்த நாள்: 8 February 2024 .
↑ Young, R. A.; Ziegler, W. T. (November 1952). "Crystal Structure of Lanthanum Nitride 1,2" (in en). Journal of the American Chemical Society 74 (21): 5251–5253. doi :10.1021/ja01141a004 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0002-7863 . https://pubs.acs.org/doi/10.1021/ja01141a004 . பார்த்த நாள்: 8 February 2024 .
↑ "Lanthanum Nitride (LaN) Powder (CAS No. 25764-10-7)" (in ஆங்கிலம்). samaterials.com. Retrieved 8 February 2024 .
↑ Deng, Zihao; Kioupakis, Emmanouil (1 June 2021). "Semiconducting character of LaN: Magnitude of the bandgap and origin of the electrical conductivity" . AIP Advances 11 (6). doi :10.1063/5.0055515 . Bibcode: 2021AIPA...11f5312D . https://pubs.aip.org/aip/adv/article/11/6/065312/994237/Semiconducting-character-of-LaN-Magnitude-of-the . பார்த்த நாள்: 8 February 2024 .