உலோக ஐதராக்சைடுஉலோக ஐதராக்சைடுகள் (Metal hydroxides) என்பது உலோகங்களுடன் ஈரணு ஐதராக்சைடு அயனி சேர்ந்திருப்பதைக் குறிக்கிறது.[1] உலோக ஐதராக்சைடுகள் யாவும் வலுவான காரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பல பொதுவான உலோக ஐதராக்சைடுகள், ஐதராக்சைடு அயனிகளால் ஆனவை மற்றும் அவை குறிப்பிட்ட அந்த உலோகத்தின் அயனிகளால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக சோடியம் ஐதராக்சைடு தண்ணீரில் கரையும்போது அதிலிருந்து சோடியம் அயனிகளும் ஐதராக்சைடு அயனிகளும் உருவாகின்றன. உலோக ஐதராக்சைடுகளை கரைக்கும்போது முற்றிலுமாக அயனியாகின்றன என்பதாலேயே அவை வலுவான காரங்கள் எனப்படுகின்றன. உலோக ஐதராக்சைடுகளின் காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) 7 இற்கு மேல் உள்ளதால் இவை காரங்கள் என அடையாளம் தரப்படுகின்றன. அயனிகள் மின்சாரத்தைக் கடத்தும் என்பதால் உலோக ஐதராக்சைடுகள் கரைக்கப்படும் போது அவை மிகநன்றாகவே மின்சாரத்தை கடத்துகின்றன. எடுத்துக்காட்டுகள்
கார உலோக ஆக்சைடுகள்வேறுசில உலோக ஐதராக்சைடுகள்மண்ணில் உலோக ஐதராக்சைடுகளின் பங்குமண்ணில் இருக்கும் தாவர குப்பைகள் சிதைவடையும்போது பெருமளவில் இயற்கை பீனால்கள் வெளிவிடப்படுகின்றன. இயற்கைத் தாவரங்களில் இருந்து கிடைக்கும் பீனாலின் அளவைவிட இது அதிகமென்று கருதப்படுகிறது. இறந்த தாவரப்பொருட்கள் சிதைவடையும்போது சிக்கலான கரிமச் சேர்மங்களை மெதுவாக ஆக்சிசனேற்றம் அடையச்செய்கின்றன அல்லது அவற்றை சக்கரைகள் அல்லது அமினோ சக்கரைகள் போன்ற சிறிய மூலக்கூறுகளாகச் சிதைக்கின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia