பாதரச(II) ஐதராக்சைடு
பாதரச(II) ஐதராக்சைடு (Mercury(II) hydroxide) என்பது Hg(OH)2 அல்லது HgH2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மெர்க்குரி டையைதராக்சைடு அல்லது பாதரச டையைதராக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். தயாரிப்பு முறைபாதரச அயனியுடன் (Hg2+) ஐதராக்சைடு அயனியை (OH− ) சேர்ப்பதால் இவ்வினையில் பாதரச(II) ஐதராக்சைடு சிறிது நேரத்தில் உற்பத்தி ஆவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும்[1], நீரிய கரைசலில் இவ்வாறு பாதரச(II) ஐதராக்சைடு தயாரிக்க சாத்தியம் இல்லை. ஏனெனில் இவ்வினையில் பாதரச ஆக்சைடு மஞ்சள் நிறத்தில் வீழ்படிவாக உருவாகிறது. 2004 ஆம் ஆண்டில் வாங் மற்றும் ஆண்ட்ரூசு ஆகியோர் முதன்முதலில் இம்மூலக்கூறு இருப்பதற்கான சோதனை ஆதாரங்களை அறிவித்தனர்[1]. பாதரசம், ஆக்சிசன், ஐதரசன் ஆகியனவற்றின் உறைகலவையை பாதரச வில் விளக்கின் மூலம் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி பாதரச(II) ஐதராக்சைடை உற்பத்தி செய்தார்கள்[1]. 50 ° செல்சியசு வெப்பநிலையில் பாதரச அணுக்களை ஆவியாக்கி அவற்றை நியான், ஆர்கான் அல்லது டியூட்ரியம் வாயுக்கள் கலந்த வாயுவில் செலுத்தி உடன் 2 முதல் 8% ஐதரசன் மற்றும் 0.2 முதல் 2.0% ஆக்சிசன் சேர்த்து அந்த உறை கலவை தயாரிக்கப்பட்டது. பின்னர் இக்கலவையை 5 கெல்வின் வெப்பநிலைக்கு ஒடுக்கி சீசியம் அயோடைடு சன்னலில் கதிரியக்கத்திற்கு உட்படுத்தினர்[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia