துத்தநாக ஐதராக்சைடு
துத்தநாக ஐதராக்சைடு (Zinc hydroxide) என்பது Zn(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இயற்கையில் இச்சேர்மம். செஞ்சாய் சதுர அமைப்பு கொண்ட உல்பிங்கைட்டு, நாற்கோணக வடிவமைப்பிலான அச்சோவரைட்டு, மற்றும் சுவீட்டைட்டு என்ற மூன்று அரிய கனிமங்களாகக் கிடைக்கிறது. ஈயம், அலுமினியம், பெரிலியம் வெள்ளீயம் மற்றும் குரோமியம் போன்ற பிற உலோகங்களின் ஐதராக்சைடுகள் போலவே துத்தநாக ஐதராக்சைடும் ஈரியல்பு ஐதராக்சைடாகும். துத்தநாக ஆக்சைடும் ஈரியல்பு கொண்ட சேர்மம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனால், வலிமையான அமிலமான ஐதரசன் குளோரைடின் நீர்த்த கரைசலிலும், சோடியம் ஐதாக்சைடு போன்ற காரக் கரைசலிலும் துத்தநாக ஐதராக்சைடு விரைவாகக் கரைகிறது. துத்தநாக உப்பு ஏதாவதொன்றுடன் சோடியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் துத்தநாக ஐதராக்சைடு வெண்மைநிற வீழ்படிவாக உருவாகிறது.
அதிக நீர் அடர்த்தியில் Zn2 + அறு-நீரயனி ஆக உருவாகும் தன்மையும் குறந்த நீர் அடர்த்தியில் நான்கு-நீரயனியாக உருவாகும்[2] தன்மையும் கொண்டதாக உள்ளது. இதனால், புரோட்டான் நன்கொடை மூலம் நீரேறிய அயனி ஐதராக்சைடு அயனி வினைபுரிகிறது என்று இவ்வினையைக் கருதி இவ்வாறு எழுதலாம். Zn2+(OH2)4(aq) + OH−(aq) --> Zn2+(OH2)3OH−(aq) + H2O(l) இங்கு அடுத்தடுத்துள்ள சில வினைகளும் இவ்வாறே கருதப்படுகின்றன. எனவே நீரேற்றம் பெற்ற துத்தநாக அயனிகளுடனான வினைகளை மேற்கண்டவாறு சரிசெய்து கொள்ளவியலும். எளிமையைக் கருதி இனி வரும் வினைகளில் நீர் மூலக்கூறுகள் காட்டப்படவில்லை. வினையில் அதிக அளவு சோடியம் ஐதராக்சைடு சேர்க்கப்பட்டால் துத்தநாக ஐதராக்சைடு வீழ்படிவானது கரைந்து சிங்கேட்டு அயனியின் நிறமற்ற கரைசல் உருவாகிவிடும்.:
ஒரு கரைசலில் துத்தநாக அயனிகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான சோதனைகளில் இதுவும் ஒன்றாகும். அலுமினியமும் ஈயமும் இதேவகையான பண்பைக் கொண்டிருப்பதால் இக்கண்டறியும் முறை ஒரு தனித்துவமான முறையாகக் கருதப்படுவதில்லை. அலுமினியம் ஈயம் ஐதராக்சைடுகளிடம் மாறுபட்டு துத்தநாக ஐதராக்சைடு அதிக அளவு அமோனியாவிலும் கரைந்து நிறமற்ற நீரில் கரையக்கூடிய அம்மைன் அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கின்றன. பொதுவாக இங்கு துத்தநாக அயனிகள் நீர் ஈந்தணைவிகளால் சூழப்பட்டிருப்பதால் துத்தநாக ஐதராக்சைடு கரைகிறது. அதிக அளவு சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன் சேர்க்கப்படும் போது, ஐதராக்சைடு அயனிகள் அணைவின் மின்சுமையை - 2 ஆகக் குறைத்து அதைக் கரைய வைக்கிறது. இதேபோல அதிக அமோனியா சேர்க்கப்பட்டாலும் ஐதராக்சைடு அயனிகளுக்கு சமநிலை கிடைக்கப்பெற்று சோடியம் ஐதராக்சைடுடன் நிகழ்ந்த வினையைப் போலவே வினை நிகழ்கிறது. அணைவுக்கு இங்கு +2 மின்சுமை அதிகரித்து அமோனியா ஈந்தணைவிகளுடன் அணைவு எண் 4 என்றாகி அணைவுச் சேர்மத்தைக் கரையச் செய்கிறது. அறுவை மருத்துவத்தில் காயங்களுக்கு மருதிடலில் உறிஞ்சுப் பொருளாகப் பயன்படுவது இதன் பிரதானப் பயனாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia