தாமிரம்(II) ஐதராக்சைடு
காப்பர்(II) ஐதாராக்சைடு என்பது ஐதராக்சைடு மற்றும் தாமிரம் சேர்ந்தது இதன் மூலக்கூறு வாய்பாடு Cu(OH)2உள்ளது. இது ஒரு வெளிர் நீலநிறத் திண்மம். தாமிர(II) கார்பனேட்டு மற்றும் ஐதராக்சைடு சேரந்த கலவை வலிமையான தாமிர ஐதராக்சைடாக விற்கப்படுகிறது.தாமிர ஐதராக்சைடு ஒரு வலிமை குறைந்த காரம். அமைப்புCu(OH)2 ன் அமைப்பு X- கதிர் படிகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தாமிரம் மையத்தில சதுர சாய்தளக்கோபுர அமைப்பில் உள்ளது. தளத்தில் இருந்து நான்கு Cu-O களும் 1.96 Å, தூரத்திலும் மற்றும் அச்சில் இருந்து 2.36 Å தூரத்திலும் உள்ளன. தளத்தில் ஐதராக்சைடு ஈந்தணைவி இரட்டை அல்லது முப்பிணைப்பில் இணைக்கப்படுகிறது.[3] வினைகள்சுமார் 100 °C இது நிலையானது. தாமிர(II) ஹைட்ராக்சைடு அம்மோனியா கரைசலுடன் வினைபுரிந்து அடர்நீல நிற டெட்ராஅம்மைன்தாமிர அயனிகளைத் [Cu(NH3)4]2+ தருகிறது. டைஆக்சிசன் முன்னிலையில் அம்மோனியா கரைசலுடன் வினைவேகமாற்ற ஆக்சிசனேற்றம் அடைந்து தாமிர அம்மைன் நைட்ரைடுகளைத்Cu(2)2( NH3)n [4][5] தருகிறது. தாமிரம்(II) ஐதராக்சைடு சிறிதளவு ஈரியல்பு தன்மை உடையது. செறிவுமிக்க காரங்களில் சிறிதளவு கரைந்து [Cu(OH)4]2− தருகின்றன.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia