சிர்க்கோனியம்(IV) ஐதராக்சைடு
சிர்க்கோனியம்(IV) ஐதராக்சைடு (Zirconium (IV) hydroxide) பெரும்பாலும் ஐதரசு சிர்க்கோனியா என்றே அழைக்கப்படுகிறது. ZrO2.nH2O என்ற உறுதியற்ற வேதி வாய்ப்பாடு அமைப்பு இச்சேர்மத்தை அடையாளப்படுத்துகிறது. ZrO2.2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சிர்க்கோனியம்(IV) ஐதராக்சைடு ஒர் ஐதராக்சைடு என்பதால், இச்சேர்மத்தை Zr(OH)4 என்ற எளிய அமைப்பில் எழுதுவார்கள். நச்சுத்தன்மையுடன் படிக உருவிலா வெண் தூளாகக் காணப்படும் சிர்க்கோனியம்(IV) ஐதராக்சைடு தண்ணிரில் கரைவதில்லை. மாறாக நீர்த்த கனிம அமிலங்களில் கரைகிறது. தயாரிப்புசிர்க்கோனியம் ஆக்சைடுடன் நைட்ரிக் அமிலம் சேர்த்து வினைபுரியச் செய்து சிர்க்கோனியம் நைத்திரேட்டு தயாரிக்கப்படுகிறது. ZrO2 + 4HNO3 → Zr(NO3)4 + 2H2O தயாரிக்கப்பட்ட சிர்க்கோனியம் நைட்ரேட்டு நீர்க்கரைசலுடன் அமோனியம் ஐதராக்சைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம்(IV) ஐதராக்சைடு வீழ்படிவாகிறது. பின்னர் இதை வடிகட்டி தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். சிர்க்கோனியம் நைட்ரேட்டு விளைபொருளைத் தொடர்ந்து ஆவியாதலுக்கு உட்படுத்தி உலர்த்தினால் ஐந்துநீரேற்றாகவும் படிகமாக்கலாம். சிர்க்கோனியம் ஆக்சைடு தேவையான அளவு கையிருப்பில் இல்லையெனில் மேற்கண்ட சிக்கலான பாதையில் சிர்க்கோனியம் ஐதராக்சைடு தயாரிக்கும் முறையின் பயன்பாடு குறைவாகும். இச்சூழலில் வர்த்தகமுறையில் அதிகமாகக் கிடைக்கும் சிர்க்கோன் மணல் எனப்படும் சிர்க்கோனியம் சிலிக்கேட்டிலிருந்து (ZrSiO4) இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. சிர்க்கோனியம் சிலிக்கேட்டுடன் மிகையளவு சோடியம் ஐதராக்சைடு கரைசல் சேர்த்து 650 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்த வேண்டும்.. நீண்ட நேரத்திற்குப் பின் சோடியம் சிலிக்கேட்டு மற்றும் சோடியம் சிர்க்கோனேட்டு ஆகியன உருவாகின்றன. பின்னர் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நீராற்பகுப்பு செய்தால் சோடியம் சிர்க்கோனேட்டு, சிர்க்கோனியம்(IV) ஐதராக்சைடாக வீழ்படிவாகிறது. இதை வடிகட்டி பின்னர் சோடியம் ஐதராக்சைடு மற்றும் சோடியம் சிலிக்கேட்டு ஆகியனவற்றை நீக்கித் தூய்மைப்படுத்தலாம். பயன்கள்பெருமளவில் சிர்க்கோனியம் சேர்மங்கள் தயாரிப்பதில் இடைநிலைப் பொருளாகப் பயன்படுவது சிர்க்கோனியம்(IV) ஐதராக்சைடின் பிரதானமான பயனாகும். இதுதவிர கண்ணாடி, சாயங்கள் மற்றும் நிறமிகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia