கோபால்ட்(II) ஐதராக்சைடு
கோபால்ட்(II) ஐதராக்சைடு (Cobalt(II) hydroxide) என்பது Co(OH)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை கோபால்ட்டசு ஐதராக்சைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். ரோசா சிவப்பு நிறத் தூளாக இது காணப்படுகிறது. α-Co(OH)2, என்ற வாய்ப்பாட்டுடன் கூடிய நீல நிற நிலைப்புத்தன்மையற்ற வடிவமும் அறியப்படுகிறது [3]. மிளிரிகள், மைகள், சாயங்களில் உலர்த்தும் முகவராக கோபால்ட்(II) ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. பிற கோபால்ட் சேர்மங்கள் தயாரித்தலிலும், மின்கல அடுக்கு மின்முனைகளை பேரளவில் தயாரிக்கும்போது ஒரு வினையூக்கியாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். தயரிப்பும் வினைகளும்கார உலோக ஐதராக்சைடுடன் நீரிய Co2+ உப்புக் கரைசலைச் சேர்க்கும்போது கோபால்ட்(II) ஐதராக்சைடு திண்மமாக வீழ்படிவாகிறது :[4]
கோபால்ட்(II) ஐதராக்சைடு 168 ° செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சூடுபடுத்தும்போது கோபால்ட்(II) ஆக்சைடாக சிதைவடைகிறது. காற்றில் ஆக்சிசனேற்றமும் அடைகிறது. 300 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும்போது Co3O4 உருவாகிறது [5][6]. இரும்பு(II) ஐதராக்சைடு போலவே கோபால்ட்(II) ஐதராக்சைடும் ஓர் அடிப்படை ஐதராக்சைடாகும். இது அமில நீரிய கரைசல்களில் [Co(H2O)6]2+ என்ற அணைவுச் சேர்மமாக உருவாகிறது. வலிமையான காரங்களில் கூடுதல் ஐதராக்சைடு அயனிகளைக் ஏற்றுக் கொண்டு [Co(OH)4]2− மற்றும் [Co(OH)6]4−போன்ற அடர் நீல கோபால்டேட்டு(II) அணைவுகளாக உருவாகிறது. கட்டமைப்புபுருசைட்டு படிகக் கட்டமைப்பில் கோபால்ட்(II) ஐதராக்சைடு படிகமாகிறது. இதன்படி, எதிர்மின் அயனிகளும், நேர்மின் அயனிகளும் காட்மியம் அயோடைடில் உள்ளது போல பொதிந்துள்ளன. அதில் காட்மியம் எண்முக மூலக்கூற்று வடிவியலை ஏற்றுள்ளது [7]. முன்னதாகக் கூறப்பட்ட α-Co(OH)2 சேர்மம் β-Co(OH)2 சேர்மத்துடன் கிட்டத்தட்ட நெருங்கிய தொடர்பைக் கொண்டது ஆகும். ஆனால் இது ஐதரோடால்சைடு கட்டமைப்பை ஏற்கிறது. இக்கட்டமைப்பின்படி எதிர்மின் அயனிகள் உள்ளடுக்குகளில் காணப்படுகின்றன. எனவே இதை ஒரு பல்லுறுத் தோற்றமாக கருதமுடியாது. β-Co(OH)2 சேர்மத்திற்கு α-Co(OH)2 சேர்மம் ஒரு முன்னோடிச் சேர்மம் எனலாம் [8] ![]() . மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia