கோலா ரொம்பின்
கோலா ரொம்பின் (ஆங்கிலம்: Kuala Rompin அல்லது Rompin Town; மலாய் மொழி: Kuala Rompin சீனம்: 云冰) என்பது மலேசியா, பகாங், ரொம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். ரொம்பின் மாவட்டத்தின் தலைப்பட்டணமும் ஆகும். இந்த நகரம் தீபகற்ப மலேசியாவின் தென்கிழக்கு கடற்கரையில், தென் சீனக் கடலை எதிர்கொண்டவாறு உள்ளது. பகாங் மாநிலத் தலைநகரான குவாந்தான் மாநகரில் இருந்து தெற்கே சுமார் 133 கி.மீ. தொலைவில் உள்ளது. பொதுசிங்கப்பூரில் இருந்து கோலா ரொம்பின் நகரத்திற்கு வரும் பயணிகள், கடலோரச் சாலையைப் பயன்படுத்த வேண்டும். ஜொகூர் பாரு - மெர்சிங் நகரங்களின் வழியாக 215 கி.மீ. பயணிக்க வேண்டும். மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மாநகரில் இருந்து, ஏறக்குறைய 3½ மணி நேரப் பயணத்தில் இந்த நகரைச் சென்று அடையலாம். வரலாறுபிரித்தானியக் காலனித்துவ நாட்களில், கோலா ரொம்பின் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. பெரும்பாலும் சிங்கப்பூர், குவாந்தான் நகரங்களுக்கு இடையே பயணிக்கும் வணிகர்கள் இந்த நகரத்திற்கு வந்து செல்வது உண்டு. 1952-இல் பகாங் மாநில அரசாங்கம், ரொம்பின் பகுதியை பெக்கான் மாவட்டத்தின் கீழ் ஒரு தன்னாட்சித் துணை மாவட்டமாக மாற்றியது. ஒன்பதாவது மாவட்டம்அதற்காக ஓர் உதவி மாவட்ட அதிகாரி பதவியும் உருவாக்கப்பட்டது. ஜே.பி. மெல்போர்ட் (J.B. Melford) என்பவர் அந்தப் பதவிக்கு 1952 டிசம்பர் 16-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். சூலை 31, 1976 இல், பகாங் சுல்தான் அஜி அகமத் சா அல் முசுதாயின் (Sultan Haji Ahmad Shah Al Musta'in Billah), ரொம்பினை ஒரு முழு மாவட்டமாகத் தகுதி உயர்த்தினார். எனவே ரொம்பின் துணை மாவட்டம், பெக்கான் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. ரொம்பின் மாவட்டம் பகாங் மாநிலத்தின் ஒன்பதாவது மாவட்டமாக மாறியது. முக்கிம்கள்ரொம்பின் மாவட்டம் ஐந்து முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலாகோலா ரொம்பின் நகரம், தியோமான் தீவுக்குச் செல்லும் நுழைவாயிலாக அறியப்படுகிறது. கோலா ரொம்பினின் உணவகங்கள் அவற்றின் கடல் உணவுகளுக்கு பிரபலமானவை. குறிப்பாக சுங்கை ரொம்பின் (ரொம்பின் ஆறு) கரையோரத்தில் பிடிபடும் நன்னீர் இறால் (Freshwater Prawns) மற்றும் நன்னீர் நண்டுகள் (Freshwater Clams); கடல் நண்டுகள் மற்றும் கடல் கணவாய் (Squids) மீன்களுக்குப் பிரபலம்.[2] தட்பவெப்ப நிலைகோலா ரொம்பின் நகரத்தின் தட்ப வெப்ப நிலை, வெப்ப மண்டல மழைக்காடு தட்ப வெப்ப நிலை ஆகும். தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை.
மேற்கோள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia