எம். எம். சுந்தரேஷ்
நீதிபதி எம். எம். சுந்தரேஷ் (21-7-1962) அவர்கள் தற்போதைய இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இவர் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆவார். ஆரம்பகால வாழ்க்கைஎம். எம். சுந்தரேஷ் ஜூலை 21, 1962 இல் ஈரோட்டில் பிறந்தார். எம்.எம். சுந்தரேஷ் தனது பள்ளிப்படிப்பை ஈரோட்டில் படித்தார், ஈரோட்டில் தனது பி. யூ. சி (முன் பல்கலைக்கழக பாடநெறி) படிப்பை முடித்தார். பின்னர், சென்னை இலயோலா கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். எம். எம். சுந்த்ரேஷ் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.[1] வழக்கறிஞர்எம். எம். சுந்தரேஷ் 1985 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலில் தனது பெயரை வழக்கறிஞர்களின் பட்டியலில் பதிவு செய்திருந்தார். எம். எம். சுந்தரேஷை மாநில அரசின் வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்திருந்தது. அவர் 1991 முதல் 1996 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். நீதிபதி எம். எம். சுந்தரேஷ் முதலில் எஸ்.சிவசுப்பிரமணியம் அவர்களிடம் பணியில் சேர்ந்தார். அவர் தனது தந்தை வி.கே.முத்துசாமியின் அறையிலும் சேர்ந்திருந்தார். திருப்பூர் மாவட்டம், கருர் மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஆர்ஓஎஸ் (தலைகீழ் ஒஸ்மோசிஸ் சிஸ்டம்) அமைப்பதைக் காண ஆர்ஓ சிஸ்டம் கண்காணிப்புக் குழுவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] உயர் நீதிமன்ற நீதிபதியாகஎம். எம். சுந்தரேஷ் 31.03.2009 அன்று வழக்கஞர்களின் பட்டியலில் இருந்து மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்கு உயர்த்தப்பட்டார். பின்னர், 29.03.2011 அன்று, அவரது நியமனம் நிரந்தரமாக்கப்பட்டது. மெட்ராஸ் உயர்நீதி மன்ற வளாகத்தில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம், லோக் அதாலத் மற்றும் நடுவர் மையம் ஆகியவற்றின் புதிய கட்டிடத்தின் தொடக்க விழாவில் எம். எம். சுந்த்ரேஷ் பங்கேற்றார்..[3] முக்கிய வழக்குகள்யானை வேட்டை வழக்குநீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வில், மாநிலத்தில் தொடர்ச்சியான யானைகள் வேட்டையாடும் சம்பவங்கள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு சுந்திரேஷ் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட பிணையம் எல்லைகளைத் தாண்டி வருவதையும் அவர்கள் கவனித்தனர். இது தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொண்ட வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது.[4] பணத் தாளில் நேதாஜியின் புகைப்படம் பற்றிய வழக்குஇந்திய நாணயத்தாள்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகைப்படம் பதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ் மற்றும் எஸ். ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வானது மத்திய அரசிடம் மனுதரரின் கோரிக்கையை பரிசீலணை செய்ய கேட்டுக் கொண்டுள்ளனர். நேதாஜி செய்த தியாகங்களை பெஞ்ச் பாராட்டியது. நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ் மற்றும் எஸ். ஆனந்தி ஆகியோர், இந்திய சுதந்திர இயக்கத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு ஈடு இணையற்றது என்று கூறினர். இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் மனு நிலைக்காது என்று கூறி மத்திய அரசின் வழக்கறிஞர் அதை எதிர்த்தார். கடைசியில், மனுதாரரின் கோரிக்கையை அனுமதிக்க பெஞ்ச் மறுத்துவிட்டது.[5] நலிவுற்றோர் சான்றிதழ் வழக்கு"பொருளாதார பலவீனமான பிரிவு சான்றிதழ் (ஈ.டபிள்யூ.எஸ் சான்றிதழ்கள்)" வருமான சான்றிதழை வழங்கக் கோரி 'அகில பாரத பிராமண சங்கம்' மற்றும் பிறரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. "பொருளாதார பலவீனமான பிரிவு சான்றிதழ் (ஈ.டபிள்யூ.எஸ் சான்றிதழ்கள்)" தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது மெட்ராஸ் உயர்நீதி மன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு அட்வகேட் ஜெனரலிடம், "இந்த சான்றிதழ் எப்படி மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு வேலைகள் மற்றும் சேர்க்கைகளைப் பெறுவதற்கு மட்டுமே செல்லுபடியாகும்?" என்று விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு, அட்வகேட் ஜெனரல், மத்திய அரசு தான் இதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட ஈ.டபிள்யூ.எஸ் சான்றிதழை மத்திய அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.[6] ரிசர்வ் வங்கி வழக்கு![]() மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஆர். ஹேமலதா ஆகியோர் இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ரிசர்வ் வங்கி) நோட்டீஸ் அனுப்பினர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கு (பிஐஎல்) ஒன்றில் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டது. வங்கி கட்டுப்பாட்டாளரால் நிர்ணயிக்கப்பட்ட செயல்படாத சொத்துக்கள் (என். பி. ஏ) விதிமுறைகள் மனுதாரரால் சவால் செய்யப்பட்டன. அந்த பொது நல வழக்கு மனுவில், பதிலை தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கிக்கு பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த வழக்கில், தற்போது நடைமுறையில் உள்ள வருமான-அங்கீகாரம் மற்றும் சொத்து-வகைப்பாடு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வல்லுநர்கள், பங்குதாரர்கள், வங்கியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பட்டய கணக்காளர்கள் அடங்கிய குழுவை அமைக்கவும் புதிய விதிமுறைகளை பரிந்துரைக்கவும் ரிசர்வ் வங்கிக்கு வழிகாடுதல் வழங்க உதரவு கேட்டு நீதிமன்றத்தில் இருந்து ஒரு உத்தரவு கோரப்பட்டது. .[7] தனியார் புகாரில் விடுதலையில் மேல்முறையீடு வழக்குநீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், வி.பாரதிதாசன், மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோரின் முழு பெஞ்ச் விசாரணையில் ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனியார் புகாரில் விடுதலை செய்யும் போது அதை எதிர்த்து மேல்முறையீடானது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய்யமுடியாது என தீர்ப்பில் கூரியுள்ளனர். ஒரு தனி நபர் புகார் செய்யும் நேரடி வழக்கின் புகார்தாரர் (காசோலை திருப்பப்படும் வழக்கின் ஒரு புகார்தாரர் போன்றவர்) காவல் துறை இறுதி அறிக்கையில் கூறப்படும் பாதிக்கப்பட்டவர் / புகார்தாரரிடமிருந்து வேறுபட்டவர் என்பதையும் அமர்வு தெளிவு படுத்தியது.[8] இந்த வழக்கை மெட்ராஸ் உயர்நீதிமன்ற தனி நீதிபதி முதலில் விசாரித்தார். ஆனால் பின்னர், "சத்ய பால் சிங் எதிர் மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் பிறர்" (2015) என்ற வழக்கினை பின்பற்றி தீர்ப்பு கூறப்பட்ட "கணபதி" என்பவர் வழக்கில் தீர்ப்பு சரியானதா இல்லையா என்பதை தீர்மானிக்க அவர் வழக்கை 3 நீதிபதிகள் அமர்விற்கு அனுப்பியிருந்தார். "சத்ய பால்" வழக்கினை விசாரணை செய்யும் போது உச்ச நீதிமன்றம், 'பாதிக்கப்பட்டவர்' என்ற வார்த்தையில் 'ஒரு புகார்தாரர்' என்ற பொருள் உள் அடங்குவதாகவும் எனவே, ஒரு புகார்தாரர் சிஆர்பிசியின் பிரிவு 372 க்கு விதிமுறையின் படி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு உயர்நீதி மன்றத்தில் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. தனி நீதிபதியின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, "தாமோதர் எஸ். பிரபு எதிர் சயீத் பாபலால் எச் (2010)" என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் "எஸ் கணபதி" தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்தது. "தாமோதர்" வழக்கில், நீதித்துறை மாஜிஸ்திரேட் முதல் வகுப்பு விடுவிக்கப்பட்ட வழக்கில், தனி நபர் வழக்கின் புகார்தாரர் சிஆர்பிசியின் பிரிவு 378 (4) இன் கீழ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம், (பிரிவு 372 ன் கீழ் அல்ல) என்றும் அதன்பிறகு சிறப்பு விடுப்பு பெற்று பிரிவு 136 ன் கீழ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதை 3 நீதிபதிகள் அமர்வு சுட்டிக் காட்டியுள்ளது. நீதிபதி பாரதிதாசன் ஒதிசைந்த தீர்ப்பினை நீதிபதி எம். எம். சுந்த்ரேஷ் வழங்கினார். காவல் துறை அறிக்கையில் தாக்கலான ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவர் என ஒரு வழிமுறையும், மற்றும் ஒரு தனிநபர் தாகல் செய்யும் நேரடியான புகார் வழக்கில் உள்ள ஒரு புகார்தாரருக்கு என ஒரு தனி வழிமுறையும் என்று அவர்களின் மேல்முறையீட்டு உரிமையைச் செயல்படுத்த தனித் தனி பாதைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், ஒருவர் பாதையில் மற்றவர் செல்ல முடியாது என்றும் கூறி நீதிபதி வெங்கடேஷ் பிரதான தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தார். ஏறக்குறைய அனைத்து உயர்நீதிமன்றங்களும் (13 உயர்நீதிமன்றங்கள்) சி.ஆர்.பி.சி.யின் பிரிவு 378 (4) இன் கீழ் உயர்நீதிமன்றத்தில் மட்டுமே விடுவிக்கப்பட்டதற்கு எதிராக ஒரு புகார்தாரர் மேல்முறையீடு செய்ய முடியும் என்று கருதுகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia