பெ. வெ. நாகரத்னா
பெங்களூரு வெங்கடராமையா நாகரத்னா (Bangalore Venkataramiah Nagarathna) (பிறப்பு 30 அக்டோபர் 1962) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். 2008 முதல் 2021 வரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார் [2] இவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி எ. சீ. வெங்கடராமையாவின் மகள் ஆவார். கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு வழக்கறிஞர்கள் குழுவால் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இவர் 2009 இல் பொது கவனத்தைப் பெற்றார்.[3] இவர் கர்நாடகாவில் வணிக மற்றும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பல குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். வாழ்க்கையும் கல்வியும்நாகரத்னா, , இந்தியாவின் 19 வது தலைமை நீதிபதியாக இருந்த எ. சீ. வெங்கடராமையா என்பவருக்கு மகளாகப் பிறந்தார். வெங்கடராமையா 19 சூன் 1989இல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும், 17 திசம்பர் 1989 அன்று ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். [4] [5] நாகரத்தினா, தில்லி பல்கலைக்கழகத்தின் சட்ட மையத்தில் சட்டம் பயின்றார். [6] தொழில்இவர், கர்நாடக வழக்கறிஞர் சங்கத்தில் 1987இல் சேர்ந்தார். 2008இல் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு பெங்களூருவில் அரசியலமைப்பு மற்றும் வணிகச் சட்டம் பயின்றார். [7] இவர் 17 பிப்ரவரி 2010 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். [8] உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு பெறும் வயதை அடைந்த பிறகு 2024 அக்டோபர் 29 அன்று இவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [4] மே 2020இல், நாகரத்னா இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய பரிசீலிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது இந்திய உச்ச நீதிமன்றத்தின் பெண் முதல் தலைமை நீதிபதியாக ஆவதற்கு தகுதியுடையதாக அமையும் என்று பல விமர்கர்கள் குறிப்பிட்டனர்.[9][4][7] 26 ஆகத்து 2021 அன்று, அவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 31 ஆகத்து 2021 அன்று பதவியேற்றார். [10] இவர் 2027ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வர உள்ளார். குறிப்பிடத்தக்க தீர்ப்புகளும் கருத்துக்களும்பரபரப்பான செய்தி2012 இல், மற்றொரு நீதிபதியுடன், போலி செய்திகளின் அதிகரிப்பைக் கவனித்து, இந்தியாவில் ஒளிபரப்பு ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும்படி மத்திய அரசுக்கு இவர் உத்தரவிட்டார். இணக்கமான கருத்தில், ஒளிபரப்பு ஊடகத்தின் மீது அரசாங்கக் கட்டுப்பாட்டை அனுமதிக்கும் அபாயங்களுக்கு எதிராகவும், ஒளிபரப்புத் துறையின் சுய கட்டுப்பாட்டை அனுமதிக்கும் சட்டரீதியான கட்டமைப்பைக் கோரியும் இவர் எச்சரித்தார்.[11] வாகன வரிவிதிப்பு2016 ஆம் ஆண்டில், மற்றொரு நீதிபதியுடன் சேர்ந்து, மாநிலத்திற்கு வெளியே வாங்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் கர்நாடகாவில் தங்கள் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு "வாழ்நாள் வரி" கட்ட வேண்டியதில்லை, கொள்கை சட்டத்திற்கு முரணானது என இவர் தீர்ப்பளித்தார்.[12] கோவில்களின் வணிகமற்ற நிலை2019 ஆம் ஆண்டில், மற்ற இரண்டு நீதிபதிகளுடன், கோவில்கள் வணிக நிறுவனங்கள் அல்ல என்றும் அதன்படி, கருணைத்தொகை செலுத்துவது தொடர்பான தொழிலாளர் சட்ட விதிகள் கோவில் ஊழியர்களுக்குப் பொருந்தாது என்றும் இவர் தீர்ப்பளித்தார்.[13] தொற்றுநோய்களின் போது கல்வி நிலைகோவிட்-19 பெருந்தொற்று பாதித்த பகுதிகளில் மதிய உணவை நிறுத்துவதற்கான கர்நாடக அரசின் திட்டத்தை நிராகரித்த அமர்வின் ஒரு பகுதியாக இவர் இருந்தார். அமர்வு அரசாங்கத்தை டிஜிட்டல் முறையில், குழந்தைகளுக்கு இணைய வகுப்புகளுக்கான அணுகலை உறுதி செய்வதை ஒருங்கிணைத்தது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை முன்னணி தொழிலாளர்களாக கருத வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia