க. வெ. விசுவநாதன்
கல்பாத்தி வெங்கடராமன் விசுவநாதன் (பிறப்பு 26 மே 1966)[1] இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.[2][3] பணிவிசுவநாதன் கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்கறிஞர் கழகத்தில் பதிவு செய்தார்.[4] இளைய வழக்கறிஞர்விசுவநாதன் 1988 முதல் 1995 வரை மூத்த வழக்கறிஞர்கள் சி. எஸ். வைத்தியநாதன் மற்றும் கே. கே. வேணுகோபால் ஆகியோரின் கீழ் இளைய வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.[5] மூத்த வழக்கறிஞர்ஏப்ரல் 28, 2009 அன்று உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் 26 ஆகத்து 2013 அன்று இந்தியாவின் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு மே 2014 வரை பதவியிலிருந்தார்.[6][7] மூத்த வழக்கறிஞராக, இவர் முக்கியமான அரசியல் சாசன இருக்கையில் வழக்குகளை வாதிட்டார். தனியுரிமைக்கான உரிமை, ஆதார் சட்டத்தின் செல்லுபடி மற்றும் திருமண சமத்துவம்[4][6] ஆகிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார். வாட்சப்-முகநூல் தனியுரிமை வழக்கில் தலையீட்டாளரான இன்டர்நெட் ப்ரீடம் கூட்டமைப்பின் சார்பில் வாதிட்டார்.[6][8] மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரக இயக்குநர்களுக்கான பதவி நீட்டிப்பு செல்லுபடியாகும் வழக்கு மற்றும் கீழ் நீதிமன்றங்களில் நீதித்துறை நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற நண்பராகப் பங்களித்தார்.[9] அமலாக்க இயக்குநரக இயக்குநருக்கான பதவி நீட்டிப்பு செல்லுபடியாகும் தன்மையைச் சவால் செய்யும் வழக்கில், "மக்களாட்சி நலன் கருதி" திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இவர் நீதிமன்றத்தில் கூறினார்.[4] அரசின் கொள்கைகளை விமர்சித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளை "இந்திய-எதிர்ப்பு கும்பல்" என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டபோது, இது குறிப்பிடத்தக்கக் கவலையைத் தூண்டியது. ஒரு மூத்த வழக்கறிஞராக, இவர் நிலைமையின் தீவிரத்தை வலியுறுத்தினார். ஓய்வுபெற்ற நீதிபதிகளை விவரிக்க இந்தியாவின் சட்ட அமைச்சர் இத்தகைய வலுவான மொழியைப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்தார்.[10] இந்திய உச்ச நீதிமன்றம்விசுவநாதன் 19 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2] இவர் நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், பட்டியலிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது நீதிபதி ஆனார். முந்தைய அனைத்து நியமனங்களையும் கருத்தில் கொள்ளும்போது, உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நியமிக்கப்பட்ட பத்தாவது உறுப்பினர் இவர்.[2][9] இவர் ஆகத்து 12, 2030 முதல் மே 25, 2031 வரை இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருப்பார்.[2] இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுப் பட்டியலிலிருந்து நேரடியாக உயர்த்தப்பட்ட நான்காவது உறுப்பினர் ஆவதற்கான வழிமுறையில் இவர் உள்ளார்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia