எம். எஸ். சுந்தரி பாய்
எம். எஸ். சுந்தரி பாய் (M. S. Sundari Bai) பொதுவாக சுந்தரிபாய் (1923 - 12 மார்ச்சு 2006) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி பின் கதாநாயகி, எதிர்மறை வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர். சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தைக் கவனித்த அவரது பெற்றோர்கள், முறைப்படி கருநாடக இசைக் கற்றுத் தந்தனர். இவர் 1940கள் முதல் 1970கள் வரை தமிழ்த் திரையுலகில் முதன்மையாகப் பணியாற்றினார்.[1][2] சுந்தரி பாய் எழுத்தாளரும் இயக்குநருமான கொத்தமங்கலம் சுப்புவின் மனைவியாவார். இவரது குறிப்பிடத்தக்க படங்களில் ஆத்மி (1939),[3] மதனகாமராஜன் (1941), நந்தனார் (1942), தாசி அபரஞ்சி (1944), கண்ணம்மா என் காதலி (1945), மிஸ் மாலினி (1947), சந்திரலேகா (1948), ஔவையார் (1953), வஞ்சிக்கோட்டை வாலிபன் (1953), படிக்காத மேதை (1960)[4] சில நேரங்களில் சில மனிதர்கள் (1976) போன்ற குறிப்பிடதக்கப் படங்களில் நடித்தார்.[2] முன் வாழ்கைசுந்தரி பாய் 1923 ஆம் ஆண்டு மதுரையில் ராமாராவ், நாகமணிபாய் இணையருக்கு முத்தமகளாகப் பிறந்தார்.[5] இவரது குடும்பம் சௌராட்டிர குடும்பமாகும். சிறுவயதிலேயே ஆடல் பாடல்களில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் இவரது பெற்றோர் இவரை முறைப்படி வாய்ப்பாட்டுப் பயிற்சிக்கும், நடன வகுப்புக்கும் அனுப்பினர். திரைப்படங்கள்சுந்தரி பாய்க்கு 14 வயதானபோது 1930 களில், தாயின் உதவியுடன் உறவினர்கள் இருந்த பம்பாய்க்குச் (இப்போது மும்பை) சென்று திரைப்பட வாய்ப்புக்கைத் தேடினார். திரைப்படத்திற்கு பதில் காபி ஆஸ்பிரின் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.[2] அந்த விளப்பரத்தைப் பார்த்த திரையுலகினர் சுந்தரி பாய்க்கு சிறு சிறு வேடங்களை வழங்கினர். அப்படித்தான் 1937இல் சுகுணசரசா என்ற படத்தில் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. திரைப்படத் தயாரிப்பாளர் கிருஷ்ணசாமி சுப்பிரமணியத்தின் மோசன் பிக்சர்ஸ் ஸ்டுடியோவை எஸ். எஸ். வாசன் வாங்கி 1940 இல் ஜெமினி ஸ்டுடியோஸ் என்று பெயரில் துவங்கினார்.[6] அதில் சுந்தரி பாய் கம்பெனி ஆர்ட்டிஸ்டாக 150 ரூபாய் மாத ஊதியத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சந்திரலேகாவில் நடித்தபோது 1,500 ரூபாய் சம்பளம் பெற்றார். ஜெமினி நிறுவனத்தின் முதல் படமான மதனகாமராஜன் படத்தில் கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். பின் கொத்தமங்கலம் சுப்புவின் மூன்றாவது மனைவியானார் சுந்தரிபாய். நந்தனார் (1942) இல் ஒரு சேரிப் பெண்ணாக நடித்தார். அதே நேரத்தில் தாசி அபரஞ்சி (1944) இல் பணிப்பெண்ணாக அவர் நடித்தது அவரது புகழை உயர்த்தியது. 1945இல் ஜெமினி நிறுவனத்தார் தயாரித்து, கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இரண்டாம் உலகப்போர் படமான கண்ணம்மா என் காதலி[7] திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம். கே. ராதா நடித்தார். 1947 இல், ஜெமினி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறாத மிஸ் மாலினியை தயாரித்தது, சுப்பு எழுதி இயக்கினார், இவர் ஆண் நாயகனாகவும் நடித்தார். இந்த படத்தில் சுந்தரி பாய் நடித்து, பாடிய இரண்டு பாடல்கள் புகழ் பெற்றது. பின்னர் இவர் சந்திரலேகா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சம்சாரம் திரைப்படத்தில் எதிர்மறை வேடத்திலும், வள்ளியின் செல்வன் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்தார். மூன்று பிள்ளைகள், ஔவையார், எங்கள் வீட்டு மகாலட்சுமி, வஞ்சிக்கோட்டை வாலிபன், தெய்வப்பிறவி, நான் கண்ட சொர்க்கம், படிக்காத மேதை, பாதை தெரியுது பார், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற குறிப்பிடதக்கப் பல்வேறு படங்களில் நடித்தார்.[2] ஜெமினியின் வெற்றிப்படமான சம்சாரம் திரைப்படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்தார். வள்ளியின் செல்வன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். பிற திரைப்படங்கள்
மறைவுஉடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய் 12 மார்ச்சு 2006 அன்று காலமானார்.[9] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia