யவன இராச்சியக் கல்வெட்டு (Yavanarajya inscription), இதனை மகேரா கிணற்றுக் கல்வெட்டு என்றும் அழைப்பர்[2]கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்மணற்கல்லால் ஆன இக்கல்வெட்டு பிராமி எழுத்துமுறையில்சமசுகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இப்பகுதி மக்களுக்கு, பிராமணர் ஒருவர் கிணறு மற்றும் குளம் வெட்டிக் கொடுத்ததைக் குறித்துள்ளது. இந்தியாவின் மதுராவிற்கு வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகேரா எனும் ஊரின் கிணற்றின் அருகே 1988-இல் இக்கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது.[3]தற்போது இக்கல்வெட்டு மதுரா அருங்காட்சியகத்தில் உள்ளது.[3][4]
கல்வெட்டின் மூலம் யவன இராச்சியத்தின் 116-வது ஆண்டு ஆட்சியின் போது, பண்டைய இந்தியாவின் மதுரா பகுதி யவனர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது எனத்தெரிகிறது.[5]இந்தோ-கிரேக்க நாட்டை ஆண்ட யவனர்கள் ஆட்சியின் போது இல்கல்வெட்டு நிறுவப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
↑ 3.03.1History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE – 100 CE, Sonya Rhie Quintanilla, BRILL, 2007 pp. 254-255
↑"Some Newly Discovered Inscriptions from Mathura : The Meghera Well Stone Inscription of Yavanarajya Year 160 Recently a stone inscription was acquired in the Government Museum, Mathura." India's ancient past, Shankar Goyal Book Enclave, 2004, p.189