கஜாரி

சிவ வடிவங்களில் ஒன்றான
கஜாரி
கஜாரி
கஜாரி
மூர்த்த வகை: 64 சிவவடிவங்கள்
(சைவ சமயக் களஞ்சியக் கூற்றுப்படி)
அடையாளம்: யானைத் தோலை
உரிக்கும் சிவபெருமான்
துணை: உமையம்மை
இடம்: கயிலை
ஆயுதம்: மான் மழு
வாகனம்: நந்தி தேவர்

கஜாரி சிவபெருமானின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றாகும். இதனை சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவ சமயக் கலைக் களஞ்சியம் கூறுகிறது. இந்த வடிவம் சிவபெருமானின் வீரத்தினை விளக்கும் எட்டு வடிவங்களில் (அட்ட வீராட்ட வடிவங்களில்) ஒன்றாகப் போற்றப்படுகிறது. [1]

சொல்லிலக்கணம்

வேறு பெயர்கள்

  • ஆனை உரி போர்த்த அண்ணல்

தோற்றம்

உருவக் காரணம்

தருகானவத்து முனிவர்களின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிச்சாண்டவ வடிவினை ஏற்றுச் சென்றார். வனத்தில் பிச்சாண்டவரைக் கண்ட முனிப்பத்தினிகள் கற்புநெறி தவறி அவருடன் சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் பிச்சாண்டவர் மீது தங்களுடைய தவ வலிமையால் எண்ணற்ற கொடிய உயிர்களையும், பொருட்களையும் ஏவினர். மான், புலி ஆகிய மிருகங்களைத் தொடர்ந்து மதங்கொண்ட யானையை அனுப்பினர்.

சிவபெருமான் அட்டாமாசித்திகளுள் ஒன்றான அணிமா சக்தியால் மிகவும் சிறியதாக மாறி, யானையின் வயிற்றுக்குள் சென்றார். அதனுள்லிருந்து மாவுருவம் கொண்டு வயிற்றைக் கிழித்து வெளியே வந்தார். யானையின் தோலை தன்னுடைய ஆடையாகப் போர்த்திக் கொண்டார், இந்த வடிவத்தினை கஜாரி என்கிறானர்.

இலக்கியங்களில் இவ்வடிவம்

  • ஆனைத்தோல் போர்த்து - சிலப்பதிகாரம்
  • கரியுரி போர்த்துகந்த எழிலவன் - நாவுக்கரசர்
  • இலங்கை திருக்கேதீச்சர பதிகம் (மத்தம் மத யானை உரி போர்த்த மணவாளன்)- சுந்தரமூர்த்தி நாயணார் ஏழாம் திருமுறை

கோயில்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 64 சிவ வடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - பக்கம் 256
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya