கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்![]() கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், கரந்தையில் உள்ளது. இப்பகுதியில் சமணர் வாழ்கின்றனர். சோழ நாட்டில் கும்பகோணம், மன்னார்குடி, தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.[1] கோயில் அமைப்புகருவறை, ராஜகோபுரம், கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகிய அமைப்புகளை இக்கோயில் கொண்டுள்ளது. கோயிலுக்கு முன்பாக கொடி மரம் உள்ளது. கோயில் தொடர்பான விழாக்கள் முகமண்டபத்தில் நடத்தப்பெறுகின்றன. முகமண்டபத்தின் வாயிலில் இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். மகாமண்டபம் பந்தல் மண்டபம் போன்ற அமைப்பில் உள்ளது. அதில் முதல் நான்கு தூண்களில் பல வடிவங்களில் தீர்த்தங்கரர் உருவங்கள் காணப்படுகின்றன. கருவறையின் மேலுள்ள கோபுரம் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. மகாசாஸ்தா சன்னதி உள்ளது.[2] ஆதீஸ்வர சுவாமி ஜினாலயம் எனப்படும் இக்கோயிலுள்ள மூலவர் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாமெனவும், ஆலயத்திலுள்ள முன் மண்டபம், ஜினவாணி ஆலயம், சாஸன தேவ தேவியர் சன்னதிகள் போன்றவை சுமார் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாமெனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தமிழகத்திலுள்ள சமண ஆலயங்களிலேயே ஜினவாணிக்கெனத் தனியாக கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம், சுற்றுப்பிரகாரம் என அனைத்தும் ஒரு தனி கோயிலுக்கான அம்சங்களுடன் அமைந்திருப்பது இங்குள்ள தனிச்சிறப்பாகும். தவிரவும் ஸ்ரீகுந்தகுந்தாசாரியார் திருவுருவம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீஜ்வாலாமாலினி, ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி மற்றும் நவக்கிரகங்களுக்கென சன்னதிகள் தனித்தனியே உள்ளன. மேலும் 16 தூண்களுடனான பூஜை மண்டபம் தனியே உள்ளது. கோவிலுக்கென நந்தவனமும் குளமும் உள்ளன.[3] மூலவர்கோயிலின் மூலவராக ஆதீஸ்வரசுவாமி எனப்படும் ஆதிநாதர் உள்ளார். மூலவர் முதலாம் தீர்த்தங்கரரான ஸ்ரீரிஷபதேவர் ஆவார். வழிபாடுபருவ விழாக்கள், பண்டிகைகள் அனைத்தும் நடைபெறுவதோடு அட்சய திரிதயை நாளில் பகவானின் திருவீதி உலாவும் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சாஸனதேவ தேவியர் திருவீதி உலாவும் நவராத்திரி காலத்தில் 7ஆம் நாளன்று தெப்ப உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.[3] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia