கருந்திட்டைக்குடி
கருந்திட்டைக்குடி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். முற்காலத்தில் கருந்திட்டைக்குடி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. தற்போது, கரந்தட்டாங்குடி என்றும் சுருக்கமாக கரந்தை என்றும் அழைக்கப்படுகிறது. சமணக்கோயில்கரந்தட்டாங்குடியில் புகழ் பெற்ற சமண ஆலயம் உள்ளது. இப்பகுதியில் சமணர்கள் வாழ்கின்றனர்.[1] கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம் எனும் கோயிலுள்ள மூலவர் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகலாம் என்று கருதப்படுகிறது.[2] கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் சோழ நாட்டில் உள்ள ஜினாலயங்களில் ஒன்றாகும். கரந்தட்டாங்குடி, மன்னார்குடி, தீபங்குடி ஆகிய தலங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.[3] கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் என்பது கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர், கடகடப்பை, மாரியம்மன்கோயில், பூமாலை ஆகிய கோயில்களை உள்ளடக்கியதாகும். கரந்தட்டாங்குடி வசிஷ்டேஸ்வரர் கோயிலிலிருந்து புறப்படும் கண்ணாடிப் பல்லக்கு, மிகவும் விமரிசையாக அலங்கரிக்கப்பட்டு, பிற பல்லக்குகளுடன் இணைந்து, அனைத்து சப்தஸ்தானங்களுக்கும் சென்று பின்னர் இறுதியில் கரந்தட்டாங்குடியை வந்தடையும். பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. கல்விஇவ்வூரில் பிறந்து வளர்ந்த தமிழவேள் உமாமகேசுவரனார், இவ்வூரிலேயே கரந்தைத் தமிழ்க்கல்லூரியை நிறுவி தமிழ்த் தொண்டாற்றினார். கரந்தைத் தமிழ்க் கல்லூரி ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்டு விளங்குகிறது. பிரபலங்கள்தமிழவேள் உமாமகேசுவரனார், கரந்தை தர்மாம்பாள் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia