கள்ளப்புலியூர்
கள்ளப்புலியூர் (Kallapuliyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம் ஆகும்.[4][5]. பெயர்காரணம்செஞ்சியிலிருந்து பென்னகர் வழியாக 16 கி.மீ தொலைவிலும் வளத்தி வழியாக 22 கி.மீ தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. முற்காலத்தில் இவ்வூர் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் கள்ளப்புலியூர் என்ற பெயர் வந்தது என்பதும், இவ்வூரில் களவுத்தொழில் செய்வோர் மிகுந்திருந்ததால் இப்பெயர் வந்தது என்பதும் மரபுவழிச் செய்தியாக நிலவுகிறது. இவ்வூரின் சிறப்புஇங்கு மிகவும் பழமைவாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது.[6] அதன் எதிராக சமணர்கள் வழிபடும் பார்சுவநாதர் கோயில் ஒன்றும் உள்ளது. மேலும் செல்லியம்மன், துலுக்கானத்து அம்மன், சிறைமீட்டாள் அம்மன் என்று பல அம்மன் கோயில்களை அமைத்து இவ்வூர் மக்கள் வணங்கி வருகின்றனர். பறையர், நாயுடு, சமணர், நாவிதர், வண்ணார், செட்டியார், வன்னியர் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்வியறிவில் பின்தங்கிக்கிடந்த இவ்வூரில் கல்வி விழிப்புணர்வு தற்போது அதிகமாகக் காணப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia