காசி தமிழ் சங்கமம்
பின்னணி"ஏக பாரதம் ஸ்ரேஷ்ட பாரதம்" என்ற உணர்வை நிலைநிறுத்துவதற்கும், தேசிய கல்விக் கொள்கை 2020 இன் பொருத்தத்தை விரிவுபடுத்துவதற்கும் "விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின்" ஒரு பகுதியாக, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிற்கும் புனித நகரமான வாரணாசிக்கும் (காசி என்றும் அழைக்கப்படுகிறது) இடையிலான அறிவு மற்றும் நாகரிகத்தின் பழமையான தொடர்புகளை மீண்டும் கண்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் முன் ஒரு முன்மொழிவு பரிந்துரைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி நிதியுதவி அளித்தது.[8][9][10] சங்கமத்திற்கு சிறப்பு தொடருந்துகளை இந்திய இரயில்வே அமைச்சகம் அறிவித்தது. [11] பிரதிநிதிகள் குழுஇந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், உள்துறை அமைச்சர் அமித் சா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பியுஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட ஒன்றிய அரசின் பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் சத்குரு, சுவாமி ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட முக்கிய ஆன்மீகத் தலைவர்களும் கலந்து கொண்டனர். [12] சர்ச்சைஇந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கோரி ஒரு மாதத்திற்கு முன்பு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியதாகவும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்டாலின் ஆதரவளிக்கவில்லை என்று ஒன்றிய அரசு குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அரசாங்கம் தங்களை அழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.[13] நிகழ்ச்சியின் முடிவில் இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாரணாசி மற்றும் கன்னியாகுமரி இடையே ஒரு புதிய தொடருந்து இயக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், பின்னர் அவ்வாறான தொடருந்து ஏதும் இயக்கப்படவில்லை.[14][15] வரவேற்புஇந்த நிகழ்ச்சி சில தமிழ் அறிஞர்களிடமிருந்து பாராட்டுகளையும், சிலரிடமிருந்து ஏளனங்களையும் பெற்றது. ஆனால் அரசியல் வல்லுநர்கள் இது ஒரு வெற்றி என்று குறிப்பிட்டனர். அதேசமயம் அரசியல் நிபுணர்களால் இது நரேந்திர மோதி தமிழ் மக்களை ஈர்ப்பதற்காக செய்த பெரிய நடவடிக்கை என்று அழைத்தனர். சிலர் இது தமிழ் வாக்குகளுக்காக வெளிப்படையாக வெட்கமின்றி செய்த அரசியல் தந்திரம் என்று சுட்டிக்காட்டினர், இது பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாது என்றன்.[16][17][18] 2023 காசி தமிழ் சங்கமம் 2.0டிசம்பர் 17, 2023 அன்று வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியால் KTS 2.0 திறந்து வைக்கப்பட்டது. வருகை தரும் தமிழ் பிரதிநிதிகளின் நலனுக்காக, பிரதமரின் உரையின் ஒரு பகுதியின் முதல் நிகழ்நேர, செயலி அடிப்படையிலான மொழிபெயர்ப்புடன் இது வழங்கப்பட்டது.[19][20][21][22] காசி தமிழ் சங்கம் நிகழ்வின் காரணமாக, 22 டிசம்பர் 2022 அன்று காசி தமிழ் சங்கம் விரைவு இரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அறிவித்தார்[23][24][25], அதைத் தொடர்ந்து இந்த ரயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி 17 டிசம்பர் 2023 அன்று தொடங்கி வைத்தார்.[26][27][28][29] 2025 காசி தமிழ் சங்கமம் KTS 3.02025ஆம் ஆண்டு, பிப்ரவரி 15 முதல் 26வரை ஆகிய தேதிகளில் நடைபெற்ற காசி தமிழ் சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1000 பிரதிநிதிகளை ஐந்து பிரிவுகள்/குழுக்களின் கீழ் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்துள்ளது[30]: (i) மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள்; (ii) விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் (விஸ்வகர்மா பிரிவுகள்); (iii) தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்; (iv) பெண்கள் (சுய உதவிக்குழுக்கள், முத்ரா கடன் பயனாளிகள், DBHPS பிரச்சாரகர்கள்); மற்றும் (v) புதிய தொழில்முனைவோர்( புதுமை, கல்வி தொழில்நுட்பம், ஆராய்ச்சி). இவர்களூடன் கூடுதலாக 200 மத்தியப் பல்கலை கழக மாணக்கார்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர். மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia