காசி தமிழ் சங்கம் விரைவு வண்டி
காசி தமிழ் சங்கம் விரைவு வண்டி 16367/16368 என்பது இந்திய ரயில்வேயின்-தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு சொந்தமான ஒரு விரைவு இரயில் ஆகும், இது இந்தியாவின் கன்னியாகுமரி மற்றும் பனாரஸ் இடையே இயங்குகிறது. பின்னணிகாசி தமிழ் சங்கம் நிகழ்வின் காரணமாக, 22 டிசம்பர் 2022 அன்று காசி தமிழ் சங்கமம் விரைவு இரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அறிவித்தார்[1][2][3], அதைத் தொடர்ந்து இந்த ரயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி 17 டிசம்பர் 2023 அன்று தொடங்கி வைத்தார்.[4][5][6][7] இது கன்னியாகுமரியிலிருந்து பனாரஸ் வரை ரயில் எண் 16367 ஆகவும், மறுதிசையில் 16368 எண்ணாகவும் இயங்குகின்றது, மேலும் இது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சேவை செய்யும் .[8] பெட்டிகளின் விவரம்16367/16368 காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு "ஏசி 1 அடுக்கு", இரண்டு "ஏசி 2 அடுக்கு", மூன்று "ஏசி 3 அடுக்கு", மூன்று "ஏசி 3 அடுக்கு சிக்கன", ஆறு "தூங்கும் வகுப்பு", நான்கு "பொது முன்பதிவு இல்லாதவை", ஒரு சரக்கறை கார் மற்றும் 2 ஈஓஜி பெட்டிகள் உள்ளன. பாதை & நிறுத்தங்கள்
இழுவைஇது அதன் முழு பயணத்திலும் ராயபுரம் லோகோ ஷெட் அடிப்படையிலான டபிள்யூஏபி-7 மின்சார என்ஜின் மூலம் இழுக்கப்படுகிறது. வெளி இணைப்புகள்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia