காட்மியம்(I) நாற்குளோரோ அலுமினேட்டு
காட்மியம்(I) நாற்குளோரோ அலுமினேட்டு (Cadmium(I) tetrachloroaluminate) என்பது Cd2(AlCl4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காட்மியம் +1 ஆக்சினேற்ற நிலையில் இருக்கும் முதல் சேர்மம் காட்மியம்(I) நாற்குளோரோ அலுமினேட்டு என்று 1961 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது[2]. அடுத்தடுத்த அதிர்வு அலைமாலை ஆய்வுகள் இச்சேர்மத்தில் காட்மியம் - காட்மியம் பிணைப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றன[3].. தனியான படிகத்தில் இரண்டு தனித்தனியான எக்சு கதிர் விளிம்புவளைவு ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன[4][5]. எனவே இச்சேர்மம் பாதரசம்(I) சேர்மங்களுடன் ஒப்பிடப்படுகிறது. அதாவது பாதரச(I) குளோரைடில் பாதரசம் Hg22+ ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. தயாரிப்பு மற்றும் பண்புகள்காட்மியம் உலோகத்தை உருகிய காட்மியம் குளோரைடில் (CdCl2) வில் கரைத்து பின்னர் அலுமினியம் குளோரைடு (AlCl3) சேர்த்து காட்மியம்(I) நாற்குளோரோ அலுமினேட்டு தயாரிக்கப்படுகிறது.
Cd2(AlCl4)2 ஒரு எதிர்காந்தப் பண்பு கொண்ட சேர்மமாகும். இணையில்லாத எலக்ட்ரான்கள் எதுவும் இச்சேர்மத்தில் இல்லை. தண்ணீரில் உடனடியாக வினைபுரிந்து Cd மற்றும Cd2+ என விகிதச்சமமாதலின்றி பிரிகையடைகிறது. இச்சேர்மத்தினுடைய மெய்புனை கட்டமைப்பில் ஈத்தேனைப் போன்ற Cd2Cl6 அலகுகள் AlCl4 அலகுகளுடன் உச்சியைப் பகிர்ந்து கொள்கின்றன. இவ்வமைப்பிலுள்ள Cd–Cd பிணைப்பின் பிணைப்பு நீளம் 257.6 பைகோமீட்டர் அல்லது 256.1 பைகோமீட்டர் ஆகும்.[4] or 256.1pm.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia