காட்மியம் பாசுபைடு
காட்மியம் பாசுபைடு (Cadmium phosphide) Cd3P2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். சாம்பல் அல்லது நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக காணப்படுகிறது. 0.5 எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் இடைவெளியைக் கொண்டுள்ள ஒரு குறைக்கடத்திப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூச்சிக்கொல்லியாகவும், சீரொளி இருமுனையங்களுக்கான பொருளாகவும், உயர்-சக்தி-உயர் அதிர்வெண் மின்னணுவியலிலும் காட்மியம் பாசுபைடு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[1] முக்காட்மியம் இருபாசுபைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். தயாரிப்புகாட்மியத்துடன் பாசுபரசை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் காட்மியம் பாசுபைடை தயாரிக்கலாம்.
கட்டமைப்புஅறைவெப்ப நிலையில் காட்மியம் பாசுபைடு நாற்கோணக கட்டமைப்பில் காணப்படுகிறது. துத்தநாக பாசுபைடு (Zn3P2), காட்மியம் ஆர்சனைடு (Cd3As2), துத்தநாக ஆர்சனைடு (Zn3As2) ஆகிய சேர்மங்களின் படிகக் கட்டமைப்பை காட்மியம் பாசுபைடின் படிகக் கட்டமைப்பும் ஒத்திருக்கிறது. Zn-Cd-P-As நான்கிணைய அமைப்பில் இந்த சேர்மங்கள் முழு தொடர்ச்சியான திண்ம-கரைசலை வெளிப்படுத்துகின்றன.[3] பாதுகாப்புமற்ற உலோக பாசுபைடுகளைப் போலவே, காட்மியம் பாசுபைடும் நச்சுத்தன்மை மிக்கதாகும். ஏனெனில் விழுங்க நேர்ந்தால் இது இரைப்பை அமிலத்துடன் வினைபுரிந்து பாசுபீன் வாயுவை உருவாக்கும். காட்மியத்தின் நச்சுத்தன்மை காரணமாக தோல், கண்கள் மற்றும் பிற உறுப்புகளுக்கு ஆபத்தானதாகும். புற்றுநோய்க் காரணியாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia