காட்மியம் புளோரைடு
காட்மியம் புளோரைடு (Cadmium fluoride) (CdF2) அதிகளவில் நீரில் கரையாத காட்மியத்தின் மூலச்சேர்மாகும்.இச்சேர்மம் ஆக்சிசனுக்கு எளிதில் துலங்கக்கூடிய பயன்பாடுகளான கலப்புலோகங்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மிகக்குறைவான செறிவுகளில் இச்சேர்மமும், இதர புளோரைடு சேர்மங்களும் மருத்துவ சிகிச்சை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. புளோரைடு சேர்மங்கள் தங்கள் வசத்திலும் பல தொகுப்பு முறை கரிமவேதியியலில் குறிப்பிடத்தக்கப் பயன்களைக் கொண்டுள்ளன. [2] திட்ட அடக்க வெப்பமானது -167.39 கி.கலோரி.மோல்−1ஆகவும் இச்சேர்மம் உருவாதலின் கிப்ஸ் கட்டிலா ஆற்றலானது -155.4 கி.கலோரி.மோல்−1. மற்றும் பதங்கமாதலின் வெப்பமானது 76 கி.கலோரி.மோல்−1 ஆகவும் உள்ளது.[3][4] தயாரிப்புகாட்மியம் புளோரைடானது வாயு நிலையிலுள்ள புளோரின் அல்லது ஐதரசன் புளோரைடுடன் காட்மியம் உலோகம் அல்லது காட்மியத்தின் உப்பினை (காட்மியம் குளோரைடு, காட்மியம் ஆக்சைடு அல்லது காட்மியம் சல்பேட்டு போன்றவை) வினைப்படுத்துவதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது. இச்சேர்மமானது காட்மியம் கார்பனேட்டை 40% ஐதரோபுளோரிக் காடியில் கரைத்து, கரைசலை ஆவியாக்கி 150 °செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் உலர்த்துவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது. இச்சேர்மத்தை தயாரிக்க உதவும் மற்றொரு முறையானது, காட்மியம் குளோரைடு மற்றும் அம்மோனியம் புளோரைடு கரைசல்களை கலந்து, பின்னர் படிகமாக்குதலுக்கு உட்படுத்தும் செயல்முறையைக் கொண்டுள்ளது. நீரில் கரையாத தன்மையையுடைய காட்மியம் புளோரைடானது கரைசலிலிருந்து வடிகட்டி பிரித்தெடுக்கப்படுகிறது.[5] காட்மியம் புளோரைடானது புளோரினை காட்மியம் சல்பைடுடன் வினைக்குட்படுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது. இந்த வினையானது, இச்சேர்மத்தின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் மற்ற வினைகளை விட மிக விரைவாகவும், கிட்டத்தட்ட தூய்மையான புளோரைடையும் மிகக்குறைந்த வெப்பநிலையிலேயே உருவாக்குகிறது.[6] பயன்கள்மின்னணுவியல் கடத்திCdF2 ஆனது இட்ரியம் அல்லது சில குறிப்பிட்ட அருமண் தனிமங்கள் ஆகியவற்றோடு கலப்பு செய்யப்பட்டு அதிகமான வெப்பநிலையில் காட்மியத்தின் ஆவிக்குள் செலுத்தப்படும் போது மின்னணுவியல் கடத்தியாக மாற்றம் செய்யப்படலாம். இந்தச் செயல்முறையானது, கலப்பு செய்யப்படும் உலோகங்களின் செறிவிற்கேற்ப, வேறுபட்ட உறிஞ்சு குணகங்களை உடைய, ஊதா நிறப்படிகங்களைத் தருகின்றன. காட்மியம் அணுக்கள் இடையீட்டு F - அயனிகளுடனான வினையைக் கொண்டு, இந்தப் படிகங்களின் மின்னணுவியல் கடத்து திறன் குறித்து விளக்கமளிக்க ஒரு வினைவழிமுறையானது முன்மொழியப்பட்டுள்ளது. இதன் அதிக CdF 2 மூலக்கூறுகளை உருவாக்குவதுடன் இவை n- வகை கடத்துத்திறன் மற்றும் ஒற்றை எதிர்மின்அயனி ஈனி நிலையின் விளைவாக மூவிணைதிறன் கொண்ட கலப்பு அயனிகளுடன் வலிமை குறைந்த பிணைப்பில் ஈடுபட்டுள்ள எதிர்மின்னிகளை விடுவிக்கவும் செய்கிறது.[7] பாதுகாப்புகாட்மியம் புளோரைடும், இதர காட்மியம் சேர்மங்களைப் போலவே, நச்சுத்தன்மை கொண்டுள்ளதால் கவனத்துடன் கையாளப்பட வேண்டும். ஒப்பீட்டளவில் புளோரைடானது மிதமான நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது. காட்மியம் புளோரைடானது, முறையாயாக கையாளப்படாவிட்டால், தீவிரமான உடல் நம் சார்ந்த பிரச்சனைகளை விளைவிக்கக் கூடும். இச்சேர்மம் கண்கள் மற்றும் தோலில் எரிச்சலைத் தோற்றுவிக்குமாகையால் கையுறைகள் மற்றும் கண்களுக்கான கண்ணாடி போன்ற அணிகலன்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் இச்சேர்மம் பயன்படுத்தும் போது உட்கொண்டாலோ, சுவாசித்தாலோ செய்யப்பட வேண்டிய எச்சரிக்கைக் குறிப்புகளைக் கொண்டுள்ளன. அமில நிலையிலோ, உயர் வெப்ப நிலையிலோ, மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையிலோ, ஐதரசன் புளோரைடு மற்றும் காட்மியம் ஆவியானது காற்றில் வெளியிடப்படலாம். இதன் மணத்தை சுவாசிக்கும் போது சுவாச மண்டலம் மற்றும் நாசித்தளைகளில் எரிச்சல், புளோரோசிஸ் மற்றும் நுரையீரல் நீர்க்கட்டு (மிகத்தீவிரமான நிலையில்) போன்றவை கூட ஏற்படலாம். காட்மியம் மற்றும் புளோரைடு ஆகியவற்றால் ஏற்படும்ஆபத்துகள் காட்மியம் புளோரைடினாலும் ஏற்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia