காமா-லினோலெனிக் அமிலம்
காமா-லினோலெனிக் அமிலம் (γ-Linolenic acid; gamma-linolenic acid; GLA) அல்லது காமோலெனிக் அமிலம் தாவர எண்ணெய்களில் காணப்படும் ஒரு கொழுப்பு அமிலமாகும். இதன் பயன் விவாதத்திற்கு உரியதானாலும் அழற்சியாலும், தன்னெதிர்ப்பு நோய்களாலும் ஏற்படும் இடர்பாடுகளை நீக்கும் உணவு சேர்க்கையாக இது விற்பனை செய்யப்படுகிறது. இதன் சரியான வேதிவடிவம் ரிலே (Riley) என்பவரால் விரித்துரைக்கப்பட்டது[1]. ஆல்ஃபா-லினோலெனிக், காமா-லினோலெனிக் அமில வடிவங்கள் இருந்தாலும், பீட்டா வடிவம் கிடையாது. முன்புக் கண்டறியப்பட்ட பீட்டா வடிவம் தூய்மைப்படுத்தும் முறையில் ஏற்பட்ட ஒரு பிழையாகும்[2]. காமா-லினோலெனிக் அமிலம் [18:3 (n−6)], நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களான ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். அவை அனைத்தும் ஆறாமிடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஆறாம் பிணைப்பாகும். காமா-லினோலெனிக் அமிலம் பதினெட்டு கார்பன் தொடரியையும், மூன்று ஒருபக்க கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பையும் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இது, ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தின் மாற்றியமாகும். இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia