காரக்காஞ்சிரம்
காரக்காஞ்சிரம் (தாவர வகைப்பாட்டியல்: Dicliptera paniculata, திக்லிப்டெரா பனிகுலாட்டா) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள்[1] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “திக்லிப்டெரா” பேரினத்தில், 223 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[2] அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[3] ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா, வளைகுடா நாடுகள், சீனா, தாய்லாந்து, நேபாளம், பாக்கிசுதான், வியட்நாம் போன்ற பல நாடுகளின் அகணிய உயிரி|அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம், மூலிகையாக பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது.குறிப்பாக, பலவித பூச்சிக்கடி, பாக்டீரியா நோய் மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.[4] மேற்கோள்கள்
இதையும் காணவும் |
Portal di Ensiklopedia Dunia