ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே (இந்திய இராணுவத் தலைவர்) லெப்டினன்ட் ஜெனரல் யோகேஷ் குமார் ஜோஷி (வடக்கு கட்டளை பிரிவு) லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், (14-படைப் பிரிவுத் தலைவர்) [1] மேஜர் ஜெனரல் அபிஜித் பப்பத் (கட்டளை அதிகாரி, (தரைப்படையின் 3-வது பிரிவு)[2] கர்ணல் விஜய் ராணே (மோதலில் காயமடைந்தவர்]])[3] (கட்டளை அதிகாரி, 11-வது மகர் ரெஜிமென்ட் ) கர்ணல் சந்தோஷ் பாபு (மோதலில் கொல்லப்பட்டவர்)[4] (கட்டளை அதிகார், 16-வது பிரிவு, பிகார் ரெஜிமெண்ட்)
ஜெனரல் ஹான் வேய்குயோ கட்டளை அதிகாரி, (மக்கள் விடுதலை இராணுவம்) லெப்டினன்ட் ஜெனரல் சாங் சூலின் (மேற்கு பிரிவின் கட்டளை அதிகாரி)[5] மேஜர் ஜெனரல் லியூ லின் (கட்டளை அதிகாரி, தெற்கு சிஞ்சியாங்[1]
இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கில் முன்னேறிய சீனப்படையிரை தடுத்து நிறுத்த வேன்டி, இந்தியப் படைகள் சூன் 15 மாலை முதல் 16 அதிகாலை வரை சீனப்படையினருடன் கைகலப்பில் ஈடுப்பட்டனர். 1996-இல் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடுக்கு 2 கிலோமீட்டருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசக்கூடாது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது. எனவே இக்கைகலப்பு முற்றி, இருதரப்பும் கற்கள், தடிகள், இரும்பிக் கம்பிகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். சூன் 15 -16 நாட்களில் நடைபெற்ற இந்த மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது.[12] சீனத்தரப்பில் குறைந்தது ஒரு இராணுவ அதிகார் உள்ளிட்ட 43 வீரர்கள் படுகாயமடைந்திருக்கவோ அல்லது கொல்லப்பட்டிருக்க வேன்டும் என செய்திகள் வருகிறது.[7][13] மோதலின் போது சீனர்கள் பிடித்து வைத்திருந்த 10 இந்திய வீரர்கள் மற்றும் 4 அதிகாரிகளை 17 சூன் 2020 அன்று விடுவித்தனர்.
பின்னணி
சீனா கோரும் பாங்காங் ஏரிப் பகுதி (பிங்க் நிறம்), இந்தியா கோரும் ஏரியின் பகுதி (சிவப்பு நிறம்). இந்த ஏரியின் மூன்றில் இருபகுதி சீனாவின் கட்டுப்பாட்டிலும், ஒரு பகுதி இந்தியாவில் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இருநாடு இடைப்பட்ட ஏரியின் எல்லைப்பகுதி சர்சைக்குரியதாக உள்ளது.
2km 1.2miles
25
Tradtional customary boundary of China declared 1960
24
Ane La Boundary of China declared 1960
20
Changlung Lungpa
19
Spangmik
18
Merak
17
Tradtional customary boundary of China declared 1960
13
Khurnak Fort
12
Sirijap
11
Chinese post at Sirijap
10
Indian post
9
Tradtional customary boundary of China declared 1960
8
7
6
5
4
3
2
1
பாங்காங் ஏரியின் வடக்கு கரை[14] with "fingers" – mountain spurs jutting into the lake[15]
6 சூன் 2020 அன்று சீனப்படையினர் உணமையான கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்தியாவின் லே மாவட்டம் மற்றும் திபெத் பகுதியில் உள்ள பாங்காங் ஏரியின் இந்தியப் பகுதியில் ஊடுவுருவி முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் தோண்டியதை, இந்திய வீரர்கள் தட்டிக் கேட்டு, கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற கட்டளையிட்டனர். இதனால் சீன வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.[16][17] ருசியாவின் டாஸ் செய்தி நிறுவனம் பிப்ரவரி 2021இல் வெளியிட்ட செய்தியில், சீனா தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமரின் லடாக் வருகை
3 சூலை 2020 அன்று (வெள்ளிக் கிழமை) காலை லடாக்கின் எல்லைப் பகுதியில் உள்ள நிமு எனுமிடத்தில் இந்திய தரைப்படை, விமானாப்படை மற்றும் இந்தோ-திபெத்திய காவல் படைவீரர்களிடையே இந்தியப் பிரதமர்நரேந்திர மோதி உரையாற்றினார். அவ்வமயம் இந்திய முப்படைகளில் தலைவர் மற்றும் தரைப்படை தலைவர்கள் உடனிருந்தனர்.[18][19][20][21] சீனாவை மனதில் வைத்து, இனி எந்த நாடும் மற்ற நாட்டின் எல்லைப்பரப்பை ஆக்கிரமிக்கும் காலம் மலையேறி விட்டது என நரேந்திர மோதியின் தனது உரையில் குறிப்பிட்டார்.
அன்றே, எல்லை மோதல்களில் காயமுற்று, லே நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வீரர்களுடன் நரேந்திர மோதி உரையாடி, ஆறுதல் கூறினார்.[22][23]
இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் - சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு
↑
India, Ministry of External Affairs, ed. (1962), Report of the Officials of the Governments of India and the People's Republic of China on the Boundary Question, Government of India Press, Chinese Report, Part 1(PDF) (Report). pp. 4–5.
The location and terrain features of this traditional customary boundary line are now described as follows in three sectors, western, middle and eastern. ... From Ane Pass southwards, the boundary line runs along the mountain ridge and passes through peak 6,127 (approximately 78° 46' E, 38° 50' N) [sic] and then southwards to the northern bank of the Pangong Lake' (approximately 78° 49' E, 33° 44' N). It crosses this lake and reaches its southern bank at approximately 78° 43' E, 33° 40' N. Then it goes in a south-easterly direction along the watershed dividing the Tongada River and the streams flowing into the Spanggur Lake until it reaches Mount Sajum.