துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை
துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை (Darbuk–Shyok-DBO Road (DS-DBO Road/DSDBO Road), இதனை வடக்கு சாலையின் துணைப் பிரிவு என்றும் அழைப்பர் Sub-Sector North road,[2] இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் அனைத்து காலநிலைகளையும் தாங்கக் கூடிய 250 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலை ஆகும்.[3] இச்சாலை இந்திய-சீன எல்லைக்களுக்கிடையே உள்ள செல்லும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய எல்லைப் பகுதியில் காரகோரம் மலைத்தொடரில் உள்ளது. இச்சாலை லடாக்கின் தலைநகரமான லே நகரத்தை துர்புக்]], சியோக் சமவெளியின் தெற்கில் உள்ள சியோக் கிராமம் மற்றும் சியாச்சின் பனியாற்றில் அமைந்த தவுலத் பெக் ஓல்டி பகுதியை இணைக்கிறது. சியோக் மற்றும் தவுலத் பெக் ஓல்டியை இணைக்கும் 220 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இச்சாலையை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு 2000 - 2019-களில் அமைத்தது.[1][4] வழித்தடம்லடாக்கின் லே நகரத்தை, துர்புக், சியோக் கிராமம் வழியாக பாங்காங் ஏரியை இணைக்கும் சாலை ஏற்கனவே இருந்தது. பின்னர் சும்மத், முண்ட்ரோ, மண்டல்டங் கிராமங்கள் வழியாக, தவுலத் பெக் ஓல்டியை இணைக்கும் இப்புதிய சாலை அமைக்கும் பணி 2000-இல் துவங்கப்பட்டு, ஏப்ரல் 2019-இல் நிறைவேற்றப்பட்டது. இச்சாலை சுல்தான் சுக்சு ஆற்றின் 430 மீட்டர் நீளமுள்ள கர்ணல் செவாங் ரின்சென் நினைவுப் பாலத்தைக் கடந்து செல்கிறது. [a] இப்பாலத்தை கடந்த பின், இச்சாலை லே மற்றும் காரகோரம் கணவாய் இடையே அமைந்த முர்கோ கிராமம் வழியாக, இந்திய -சீனாவைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைந்த புர்ட்சா மற்றும் கிசில் லங்கர் வழியாக தவுலத் பெக் ஓல்டியை அடைகிறது.[6] கட்டுமானம்இமயமலையில் 13,000 அடி முதல் 16,000 அடி உயரத்தில், 2000-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலைக் கட்டுமானம், 2014-இல் ஆண்டில் நிறைவேற்றுவிதமாக திட்டமிடப்பட்டது. 2011-இல் மேற்கொள்ளப்பட்ட சாலை ஆய்வின் போது, இச்சாலையின் கட்டுமானம் ஆறுகளின் கரையோரங்களில் இருப்பதால், இராணுவ பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என முடிவு செய்யப்பட்டது.[7] பின்னர் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு இச்சாலையை ஏப்ரல் 2019-இல் நிறைவு செய்தது. [8] அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia