காலனிய சிங்கப்பூர்
காலனிய சிங்கப்பூர் அல்லது குடிமைப்பட்ட கால சிங்கப்பூர் என்பது 1946 முதல் 1958 வரை ஐக்கிய இராச்சிய முடியாட்சியின் கீழ் சிங்கப்பூர் ஆட்சி செய்யப்பட்டதைக் குறிப்பிடுவதாகும். இந்தக் காலக்கட்டத்தில், கிறிஸ்துமசு தீவு, கொக்கோசு (கீலிங்) தீவுகள் மற்றும் லபுவான் ஆகிய பிரதேசங்கள் சிங்கப்பூரில் இருந்து நிர்வாகம் செய்யப்பட்டன. 1945-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு முடிவடைந்த பின்னர்; அதே காலக்கட்டத்தில் நீரிணை குடியேற்றங்கள் எனும் பிரித்தானிய நிர்வாக அமைப்பு கலைக்கப்பட்டது. அதன் பின்னர் தான் காலனிய சிங்கப்பூர் எனும் புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரித்தானிய முடியாட்சியின் அதிகாரம், அப்போதைய சிங்கப்பூர் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1958-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் குடியேற்றப் பகுதிக்கு மாநிலம் எனும் தனி மாநிலத் தகுதி வழங்கப்படும் வரையில், காலனிய சிங்கப்பூர் எனும் பிரித்தானிய முடியாட்சி நிர்வாகம் நீடித்தது.[2] 1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு முழு உள் சுயாட்சி வழங்கப்பட்டது.[3] சில ஆண்டுகள் தன்னாட்சிக்குப் பிறகு 16 செப்டம்பர் 1963-இல், மலாயா, சரவாக் மற்றும் வடக்கு போர்னியோ எனும் சபா; ஆகிய பிரதேசங்களுடன் சிங்கப்பூர் இணைந்து மலேசியா எனும் கூட்டமைப்பை உருவாக்கியது. இதன் மூலம் [[சிங்கப்பூர்]|சிங்கப்பூரில்]] 144 ஆண்டுகால பிரித்தானிய ஆட்சி முற்றிலுமாக ஒரு முடிவுக்கு வந்தது. மலேசியக் கூட்டமைப்பின் அரசியல், பொருளாதாரம் மற்றும் இனம் தொடர்பான பிரச்சினைகளின் காரணமாக, ஆகஸ்டு 9, 1965-இல் சிங்கப்பூர்; அந்தக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி, தன்னை ஒரு சுதந்திர இறையாண்மை நாடாக அறிவித்தது. பொதுதுமாசிக் 14-ஆவது நூற்றாண்டிலேயே பிரசித்திப் பெற்ற ஒரு துறைமுகமாக விளங்கியது. மயபாகித் பேரரசு வல்லரசின் ஆட்சியிலும்; மலாக்கா சுல்தானிய ஆட்சியின் போதும், அன்றைய சிங்கப்பூர் பிரபலமான ஒரு வர்த்தக மையமாக விளங்கியது. கடல்வழி வணிகத்திற்கு துமாசிக் பொருத்தமான புவியியல் அமைப்பைக் கொன்டிருந்தது. அதை டச்சுக்க்காரர்களும் போர்த்துகீசியர்களும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இருப்பினும் அவர்களைத் தவிர்க்க எண்ணிய பிரித்தானியப் பேரரசு, தென்கிழக்காசிய மண்டலத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தத் தொடங்கியது. 1819-ஆம் ஆண்டில் சர் இசுடாம்போர்டு இராஃபிள்சு ஆளுநராக சிங்கப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூரில் ஒரு துறைமுகப்பட்டினத்தை அமைப்பதால் சீனா மற்றும் மலாக்கா நீரிணை வர்த்தகத்தைக் கையகப்படுத்தலாம் என்று கருதினார். அந்த வகையில் சிங்கப்பூரில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் தளம் அமைக்கப்பட்டது. வரலாறுகாலனிய சிங்கப்பூர் (Colony of Singapore) 1946-ஆம் ஆண்டிலிருந்து மலாயாவுடன் நிர்வாக ரீதியில் இணைந்திருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் சப்பானிய ஆதிக்கத்தில் இருந்தது. 1945-ஆம் ஆண்டில் ஜப்பான் சரண் அடைந்ததும், மீண்டும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்தது. 1946-இல் நீரிணை குடியேற்றங்கள் கலைக்கப்பட்டது. சிங்கப்பூர், கொக்கோசு (கீலிங்) தீவுகள், கிறிஸ்துமசு தீவு ஆகிய குடியேற்றங்கள் தனி ஆட்சிகளை உருவாக்கிக் கொண்டன. அந்த வகையில் சிங்கப்பூரின் பகுதித் தன்னாட்சி முறை (partial internal self-governance); சிங்கப்பூருக்குச் சுதந்திரம் கிடைக்கும் வரை பிரித்தானிய ஆட்சியின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. இரண்டாம் உல்கப் போர்இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் சரணடைந்த போது, சிங்கப்பூரின் நிர்வாகத்திற்கு பிரித்தானியர் பொறுப்பு ஏற்கவில்லை. அதனால் சிங்கப்பூர் மக்களிடையே பெருங் குழப்பங்கள் ஏற்பட்டன. திருடு, கொலை, பழி வாங்குதல் போன்ற குற்றச் சம்பவங்கள் நாடு முழுவதும் பரவின.[4] செப்டம்பர் 1945-இல் பிரித்தானியப் படை மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தது. ஆயிரக் கணக்கான சிங்கப்பூரர்கள் சாலைகளில் நின்று உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றனர். செப்டம்பர் 1945 முதல் மார்ச் 1946 வரை சிங்கப்பூர், பிரித்தானிய இராணுவத்தால் ஆளப்பட்டது. ஆனால், உணவு அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது சில நோய்களுக்கு வழிவகுத்தது. வேலை வாய்ப்புகள் இல்லை. உணவு விலைகள் கூடின. இதனால் மக்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். காலம் செல்ல செல்ல பிரித்தானியரின் செல்வாக்கு குறைய தொடங்கியது. 1949-1959 வரை சிங்கப்பூர், ஒரு காலனியாக இருந்தது. அதன்பிறகு 1965-இல் விடுதலை பெற்றது. மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia