குடும்ப வன்முறையும் கருவுறலும்குடும்ப வன்முறையும் கருவுறலும் இணைந்து நெருங்கியக் கூட்டாளி வன்முறை வடிவம் பெறுகின்றது; இதில் நலக்கேட்டிற்கான தீவாய்ப்புகள் மிகுகின்றன. உடல் வருத்தியோ, சொல்லாலோ, உணர்ச்சிபூர்வமாகவோ, கருவுற்ற நேரத்தில் நிகழ்த்தும் வன்முறை தாய்க்கும் சேய்க்கும் பல உடலிய, உளவிய பாதிப்புக்களை விளைவிக்கின்றது. கருவுற்ற காலத்து குடும்ப வன்முறை கருவுற்ற பெண்ணிடம் முறையற்ற நடப்பு என வகைப்படுத்தப்படுகின்றது. இத்தகைய நடத்தை தனது தீவிரத்திலும் நிகழும் கால இடைவெளிகளிலும் பெரும் வேறுபாட்டைக் கொண்டிருக்கலாம். திருமண உறவில் ஏற்பட்ட நீண்டகால கசப்பு கருவுற்ற காலத்தில் தொடரலாம் அல்லது கருவுற்ற பின்னரே துவங்கலாம்.[1] இத்தகைய சூழலில் பெரும்பாலும் ஆண் பெண்ணுக்கு தீங்கு செய்வது நடக்கின்றது; சிறிய அளவில் பெண்ணால் ஆணுக்குத் தீங்கு நேர்வதுமுண்டு.[2] காரணங்களும் தூண்டுதல்களும்கருவுற்ற காலத்தில் வன்முறைக்கு வித்திட பல காரணங்கள் உள்ளன. கருவுறலே வலுக்கட்டாயமாக இருந்திருக்கலாம்; தான் கருத்தரிப்பதை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பது இனப்பெருக்கு வலுக்கட்டாயம் எனப்படுகின்றது. குடும்பக்கட்டுப்பாட்டு அழிப்புகளை பெண் கூட்டாளிகளுக்கு எதிராக ஆண்கள் நிகழ்த்துவதற்கும் குடும்ப வன்முறைக்கும் நெருங்கியத் தொடர்புள்ளது.[3] பிறக்கவிருக்கும் குழந்தைக்காக கருவுற்ற காலத்தில் குடும்ப வன்முறை வெளிப்படாது புகைந்து கொண்டிருக்கும் வாய்ப்புண்டு. இத்தகைய நிலையில் குழந்தை பிறந்தவுடனேயே பெண்கள் வன்முறைக்கு ஆளாகும் வாய்ப்புகள் மிகுதி.[4] பாலுறவிற்கு வலுக்கட்டாயப்படுத்தப்படுவதாலும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அனுசரிக்க தடுக்கப்படுவதாலும் குடும்ப வன்முறையினால் பெண்கள் கருவுறுவதும் கூடுதலான குழந்தைகளைப் பெறுவதும் கூடுதலாக உள்ளது.[5] அதிக குழந்தையுள்ள குடும்பங்களுக்கும் குடும்ப வன்முறைக்கும் தொடர்புள்ளதாக அறியப்பட்டுள்ளது.[5] முன்னதாக நிறைய குழந்தைகள் இருப்பதால் ஏற்படும் மனத்தகைவால் குடும்ப வன்முறை தூண்டப்பட்டதாக கருதப்பட்டது; ஆனால் அண்மைய ஆய்வுகள் பிறப்புக்களுக்கு முன்னரே வன்முறை இருந்துள்ளதாக காட்டுகின்றன.[5] தாக்கங்கள்கருவுற்ற நேரத்தில் நிகழும் வன்முறை தாய்க்கும் சேய்க்கும் அபாயகரமான விளைவுகளை உண்டாக்கக்கூடியது. வாய் வார்த்தைகளாலோ, உணர்ச்சிமிகு செய்கைகளாலோ, உடல் வருத்தும் அடிகளாலோ இருவருக்குமே தீங்கு நேரும் தீவாய்ப்புள்ளது.[6] கருக்கால வன்முறையால் கருச்சிதைவு, காலந்தாழ்ந்த முன்பேறுகால கவனம், செத்துப் பிறப்பு, குறைப்பிரசவம், கருவிற்கு காயம் (சிராய்ப்பு, எலும்பு உடைதல், குத்துக் காயங்கள்)[7] மற்றும் குறைந்த பிறப்பெடை ஆகியன நிகழும் வாய்ப்புகள் உள்ளன.[8] தாய்க்கு கூடுதலாக உளவியல் பிரச்சினைகள், தற்கொலை முயற்சிகள், ஏற்கெனவே உள்ள நீண்டகால நோய்கள் தீவிரமாதல், காயங்கள், போதைப்பொருள் பயன்பாடு, மனக்கலக்கம், மனத்தகைவு, நீங்கா வலி, மற்றும் பெண்நோயியல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.[9] கருவுறாத காலத்தை விட கருவுற்ற காலத்தில் மிகவும் மோசமாக பெண்கள் தாக்கப்படுவதாக ஆய்வொன்று அறிவிக்கின்றது.[10] பேறுகால தாய் இறப்பிற்கு நெருங்கிய கூட்டாளி வன்முறையே பெரும் காரணமாக உள்ளது. இதற்கு அடுத்ததாகவே கொலை உள்ளது.[11] இந்தியாவில் மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் கருக்கால இறப்புகளில் 16% கூட்டாளி வன்முறையால் நிகழ்ந்துள்ளன.[12] குடும்ப வன்முறையால் கருக்கலைப்பு பயன்பாடு கூடுவதாகவும் அறியப்பட்டுள்ளது.[13] தங்கள் நிதி, வீடு கவலைகளால் கருவுற்ற பெண்கள் தங்களுக்கு ஏற்படும் வன்முறையை வெளிப்படுத்துவதில்லை மற்றும் துன்புறுத்துபவரிடமிருந்து விலகிச் செல்வதுமில்லை.[14] பரப்புகைகுடும்ப வன்முறைக்கும் கருக்காலத்தில் பெண்கள் மீதான உடல் மற்றும் பாலியல் வன்முறைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராயந்தபோது இது பெருமளவில் வெளிப்படாதும் குறைத்து மதிப்பிடப்பட்டும் வருவதாக அறியப்பட்டது.[15] ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய அமெரிக்காவில் 324,000க்கும் கூடுதலான கருவுற்ற பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர்.[16] பல நாடுகளும் கருக்காலத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளான வயதுக்கு வந்த பெண்களை புள்ளியியல்படி மதிப்பிட்டு வருகின்றன:
பதின்ம வயதினருக்கு கருக்கால குடும்ப வன்முறை கூடுதலாக உள்ளன.[21] வறியநிலை பதின்ம அகவை தாய்களுக்கு இந்நிகழ்வின் விழுக்காடு 38% அளவில் கூடியதாக உள்ளது.[20] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia