இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) என்பது இந்தியாவின், முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சியாகும். இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும்.[சான்று தேவை] இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்"கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா, அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதே மில்லத். சுதந்திர இந்தியாவில்இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு, 1949இல் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு, சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது. பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது. தலைவர்கள்காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவராக இப்ராஹிம் சுலைமான் சேட், பனாத்வாலா, முன்னாள் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ. அகமது ஆகியோர் பணியாற்றினர். தற்போது கே. எம். காதர் மொகிதீன் அகில இந்தியத் தலைவராக உள்ளார்.[2][3] தமிழகத்தில் அப்துல்சமது, கே. எம். காதர் மொகிதீன் ஆகியோர் தமிழக தலைவராக பணியாற்றினர். சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்1952 ஆம் ஆண்டு முதல் 1967 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்:
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்1971 ஆம் ஆண்டு முதல் 2021 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை)1952 ஆம் ஆண்டு முதல் 2021 வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்:
நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மாநிலங்களவை)
கேரள சட்டமன்றத் தேர்தல், 20162016,கேரளா சட்டமன்றத் தேர்தலில், இக்கட்சி ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்து 24 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 20212021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[5][6] ஆதாரம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia