குறள்வெண் செந்துறைகுறள்வெண் செந்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. இஃது அளவொத்த (ஒரே சீர் எண்ணிக்கை கொண்ட அடிகள்) இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ (நான்கு சீர்) நெடிலடியாகவோ (ஐந்து சீர்) கழிநெடிலடியாகவோ (ஐந்துக்கும் மேற்பட்ட சீர்கள்) அமையும். இது செந்துறை வெள்ளை என்றும் அறியப்படுகிறது. தடையில்லாத இனிய ஓசையும் மென்மையான பொருளும் பெற்று வரும் என குறள்வெண் செந்துறை விளக்கப்பட்டுள்ளது. [1] [2]
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள் உசாத்துணைஅடிக்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia