திருக்குறளிலுள்ள 1330 பாடல்கள் 133 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பாகுபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவை மூன்று பால்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இதிலும் எந்த மாற்றமும் இல்லை. எனவே இந்தப் பாகுபாடுகள் திருவள்ளுவராலேயே செய்யப்பட்டவை எனக் கருதலாம்.
சிலரது பதிப்புகளில் அதிகாரங்களின் வரிசைமுறை இடம் மாறுகிறது. இது பதிப்பு செய்யும் ஆசிரியரின் மனப்பாங்கால் அமத்துக்கொள்ளப்பட்ட மாற்றம்.
பால் பாகுபாடு
20 சிறுமேதாவியார் பார்வை (வீடு ஒன்றிய பாயிரம் 4, அறம் 33, ஊழ் 1, பொருள் 70, இன்பம் 25)
37 மதுரைப் பெருமகனார் (அறம் 38, பொருள் 70, இன்பம் 25)
இயல் பாகுபாடு
22 தொடித்தலை விழுத்தண்டினார் பார்வை
அறத்துப்பாலில் 4 இயல் (பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ்)
பொருட்பாலில் 7 இயல் (அரசு, அமைச்சு, அறன், கூழ், படை, நட்பு, ஒழிபு)
காமத்துப் பாலில் 3 இயல் (ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று, இருபால் கூற்று)
25 எறிச்சலூர் மாடலனார்
அறத்துப்பால்
பாயிரம் 4
இல்லறம் 20
துறவறம் 13
ஊழ் 1
26 போக்கியார்
பொருட்பால்
அரசியல் 25
அமைச்சியல் 10
அரணியல் 2
பொருளியல் 1
படையியல் 2
நட்பியல் 17
ஒழிபியல் 13
27 மோசி கீரனார்
காமத்துப் பால்
ஆண்பால் கூற்று 7
பெண்பால் கூற்று 12
இருபால் கூற்று 6
திருக்குறளில் பாயிரம்
திருவள்ளுவ மாலையில் இடம்பெற்றுள்ள நத்தத்தனார் (16) பாடல் 'ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பயின்றபின்' வேறு நூலைக் கேட்க வேண்டியதில்லை என்று கூறுகிறது. இந்தத் தொடரில் பாயிரமாக அமைந்த பாடல் 1330-இல் அடங்கவில்லை. திருக்குறளுக்கு இருந்த பாயிரம் வேறு, 1330 குறட்பாக்கள் வேறு என்பது இத்தொடர் தரும் விளக்கம். இதற்குப் பாயிரத்தினோடு 1330 எனப் பொருளமைதி காண்கின்றனர்.
11-ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருவள்ளுவமாலை நூலில் காணப்படும் பாகுபாடுகளை மேலே காணலாம். கீழ்க்காணும் உரையாசிரியர்களின் பகுப்பில் அறத்துப்பாலைப் பாயிரம் 4, இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 1 என 4 இயல்களாகப் பகுத்திருப்பதிலும் எந்த மாறுபாடுகளும் காணப்படவில்லை. பொருள்-பாலையும், காமத்துப்பாலையும் இயல்களாகப் பகுத்திருப்பதில் மாறுபாடுகள் காணப்படுகின்றன.
உரையாசிரியர்
பொருள்-பாலில் இயல் எண்ணிக்கை
பொருள்-பாலில் இயலின் பெயரும் அதில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையும்
காமத்துப்பாலில் இயல் எண்ணிக்கை
காமத்துப்பாலில் இயலின் பெயரும் அதில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையும்
↑மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. pp. 102, 103. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)