திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்சில் ஏற்றப்பட்ட காலவரிசை அடைவு ஆகும்.
அண்மைக் காலத்தில் சில தமிழ் அறிஞர்கள் இத்தகைய காலவரிசைப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இவண் தரப்படுகின்ற பட்டியல் திருக்குறள் மாமுனிவர் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற கு. மோகனராசு திருக்குறள் உரை வகைகள் (2005) என்னும் நூலில் தரும் செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.[1] 2006இல் வெளியான சில நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்
தொடர் வரிசை எண்
அச்சிடப்பட்ட ஆண்டு
ஆசிரியர் பெயர்
நூல் பெயர்த் தலைப்பு
அச்சகம்/பதிப்பகம்
குறிப்புகள்
1
1812
திருவள்ளுவர்
திருக்குறள்
-----
திருக்குறள் மூலம் மட்டும் அச்சானது
2
1838
திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர்
பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்
-----
திருக்குறளுக்கு அச்சேறிய முதல் உரைநூல் இதுவே. இது 19ஆம் நூற்றாண்டிலேயே 8 மீள்பதிப்புகள் பெற்றது.
3
1840
பரிமேலழகர்
திருக்குறள் உரை
அமெரிக்கன் மிசியோன் அச்சுக்கூடம், சென்னை
முதன்முதல் அச்சேறிய பரிமேலழகர் உரை. முதல் 24 அதிகாரங்களுக்கு மட்டும். இந்த உரையோடு இராமாநுசக் கவிராயர் எழுதிய வெள்ளுரையும் புத்துரையும், துறு ஐயர் (W.H. Drew) எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாயின.
4
1849
எம். வீராசாமி பிள்ளை (பதிப்பாசிரியர்)
பரிமேலழகர் உரை
சென்னை
திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை முழுவதும் முதன்முறை அச்சானது. இது 19ஆம் நூற்றாண்டிலேயே 8 மீள்பதிப்புகள் பெற்றது.
5
1849
திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர்
பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்
களத்தூர் வேதகிரி முதலியார், இரத்தின நாயக்கர் அண்டு சன், சென்னை
1838ஆம் ஆண்டு நூலின் மீள்பதிப்பு
6
1850
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக முதலியார், கந்தசாமி முதலியார்
தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
-----
பரிமேலழகர் உரை முழுவதும்
7
1850
களத்தூர் வேதகிரி முதலியார்
திருக்குறள் மூலமும் உரையும் (பதவுரை, கருத்துரை, விசேட உரை)
சண்முக விலாச அச்சுக்கூடம், சென்னை
பரிமேலழகருரைத் தழுவல்
8
1856
கேசவ முதலியார்
தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை
பரிமேலழகர் உரை முழுவதும்
9
1856
களத்தூர் வேதகிரி முதலியார்
திருக்குறள் மூலமும் உரையும்
கேசவ முதலியார் பிரபாகர அச்சுக்கூடம், சென்னை
பரிமேலழகருரைத் தழுவல்
10
1861
கந்தசாமிப் பிள்ளை
திருக்குறள் பரிமேலழகருரை, சரவணப் பெருமாள் உரை விளக்கத்துடன்
திருநெல்வேலி
பரிமேலழகர் உரையோடு உரை விளக்கமும்
11
1861
கந்தசாமிப் பிள்ளை
திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்
திருநெல்வேலி
-----
12
1861
ஆறுமுக நாவலர்
தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை
பரிமேலழகர் உரை முழுவதும்
13
1861
ஆறுமுக நாவலர்
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை
பரிமேலழகர் உரை முழுவதும்
14
1869
கருணானந்த சுவாமிகள், கேசவ முதலியார்
திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்
திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் பத்துப்பேர் என்பது மரபு. அவர்கள் மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், பரிதியார், மல்லர், திருமலையர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் என்போர் ஆவர். இவர்களுள் மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் என்னும் ஐவரின் உரைகளே முழுமையாகக் கிடைத்துள்ளன.
திருக்குறளுக்கு உரையாக முதலில் அச்சில் ஏறியது திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் என்னும் நூல் ஆகும் (1838). இதிலிருந்து பரிமேலழகர் என்னும் பழைய ஆசிரியரின் உரை புதிய வடிவத்தில் அச்சேறியதற்கு சரவணப் பெருமாளே வழிவகுத்தார் எனலாம். 19ஆம் நூற்றாண்டிலேயே இவ்வுரை எட்டுமுறை வெளிவந்துள்ளது.
1840இல் தான் முதன்முதல் பரிமேலழகர் உரை, முதல் 24 அதிகாரங்களுக்கு அச்சேறி வெளிவந்துள்ளது. அந்த உரையோடு இராமாநுசக் கவிராயர் எழுதிய வெள்ளுரையும், புத்துரையும் துறு ஐயர் (W.H. Drew) எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் திருக்குறளின் முதல் 24 அதிகாரங்களுக்கு மட்டுமே.
இச்செய்தியின் வழி பார்க்கும்போது, முதன்முதல் திருக்குறள் புத்துரைக்கு வித்திட்டவராக இராமாநுசக் கவிராயர் விளங்குவதாக அறிய முடிகிறது.
முதன்முதலாக, பரிமேலழகர் உரை முழுவதும், 1849இல் சென்னையில் எம். வீராசாமி பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பரிமேலழகர் உரை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே எட்டுமுறை வெளிவந்துள்ளது.
1838இல் வெளியான சரவணப் பெருமாள் ஐயரின் தழுவல் உரையை அடுத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டு அளவிலேயே சில அறிஞர்கள் பரிமேலழகரைத் தழுவித் திருக்குறளுக்கு உரைகள் வழங்கினர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு உரை என்றால் அது பரிமேலழகர் உரையே என்ற நிலை நிலவியது. அது வைதிக உரையாகவும் இலக்கண நுட்பங்கள் செறிந்த உரையாகவும் அமைந்தது கூடுதல் ஈர்ப்பிற்குக் காரணமாயிற்று. இக்காலப் பகுதியில் மணக்குடவர் உள்ளிட்ட பிற பழைய உரையாசிரியர்களின் உரைகளைத் தமிழறிஞர்கள் அறியாதார் அல்ல; ஆனால் பரிமேலழகர் மீது இருந்த பற்றால், அவற்றை அச்சிட்டு வெளியிடக்கூட யாரும் முன்வரவில்லை. ஒருவகையில் அவை மறைக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.
திருக்குறள் சமண நூலா சைவ நூலா என்றொரு வாதம் எழுந்த காலகட்டம் அது. சமணத்திற்கு ஓரளவு ஆதரவாகத் தோன்றிய மணக்குடவர் உரையும் பெரும் சார்பாக இருந்த காலிங்கர் உரையும் போற்றப்படவில்லை. அதே வேளையில் திருக்குறள் முழுக்க முழுக்க சைவமே என்ற போக்கில் எழுதப்பட்ட பரிதியார் உரையையும் யாரும் போற்றியதாகத் தெரியவில்லை. சைவரும் வைணவருமாக இருந்த அக்காலத் தமிழ்ப் புலவர்களுக்குப் பரிமேலழகர் பொதுவானவராக அமைந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பரிதியார் உரையில் காணும் ஆழமற்ற போக்கும் வேறொரு காரணமாக இருந்திருக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்
தொடர் வரிசை எண்
அச்சிடப்பட்ட ஆண்டு
ஆசிரியர் பெயர்
நூல் பெயர்த் தலைப்பு
அச்சகம்/பதிப்பகம்
குறிப்புகள்
26
1902
திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர்
பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்
-----
1838இல் வெளியான உரையின் மறு பதிப்பு
27
1904
கோ. வடிவேலு செட்டியார்
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் விளக்கவுரையுடன்
சென்னை
பரிமேலழகருரையை எளிமைப்படுத்தல்
28
1909
பா. கங்காதர தேவர்
திருக்குறள் முதற்பாவின் பரிமேலழகர் உரை விளக்கம்
பிரசிடென்சி அச்சுக்கூடம், சென்னை
பரிமேலழகருரையை எளிமைப்படுத்தல்
29
1909
திருமுல்லைவாயில் பி.டி.ரத்தினம் பிள்ளை
தமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம்
சீர்காழி
பரிமேலழகருரை தழுவிய புத்துரை
30
1909
பழனியப்பா செட்டியார்
திருக்குறள் மூலம் (அறம், பொருள்: பதவுரை, கருத்துரை; காமம்: பொழிப்புரை)
திருக்குறள் அருஞ்சொற்களுக்குப் பொருளும், சொல் அடைவும் முதன்முதல் அச்சேறியது
43
1925
கா. பொன்னுசாமி நாட்டார்
திருக்குறள் மணக்குடவர் உரை
-----
முதன்முறையாக மணக்குடவர் உரை முழுதும் அச்சேறியது
44
1925
கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியார்
திருக்குறள் பரிமேலழகருரை (காமத்துப்பால்)
சென்னை
பரிமேலழகருரை மறுபதிப்பு
இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகளின் சில பண்புகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்ட திருக்குறள் எழுச்சியைவிட இக்காலப் பகுதியில் அந்த எழுச்சியின் வீச்சு கூடுதலாக இருப்பதைக் காணமுடிகிறது. இக்காலப் பகுதியில் கீழ்வரும் போக்குகள் தெரிகின்றன:
- பரிமேலழகர் உரைப் பதிப்புகள்
- பரிமேலழகர் உரைக்கான விளக்க உரைகள்
- பரிமேலழகர் உரையைத் தழுவிய உரைகள்
- தமிழறிஞர்களின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- மணக்குடவர் உரை வெளியீடு
- திருக்குறள் சொற்குறிப்பு அகராதி வெளியீடு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தது போலவே இருபதாம் நூற்றாண்டின் முதற்கால் நூற்றாண்டிலும் பரிமேலழர் உரை பெரும் மதிப்போடு விளங்கியது. திருக்குறள் சான்றோர் நால்வர் பரிமேலழகர் உரையைப் பதிப்பித்துள்ளனர் (ஆண்டுகள்: 1910, 1913, 1920, 1924-1925).
பரிமேலழகர் உரையைத் தத்தம் விளக்கங்களோடு கோ. வடிவேலு செட்டியார், பா. கங்காதர தேவர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர் (ஆண்டுகள்: 1904, 1909, 1919).
பத்தொன்பதாம் நூற்றாண்டைப் போலவே இக்காலப் பகுதியிலும் சில சான்றோர் திருக்குறளுக்குப் புதியதாக உரை கண்டுள்ளனர். அவர்கள் பி.டி. ரத்தினம் பிள்ளை (ஆண்டு: 1909), பழனியப்பா செட்டியார் (ஆண்டு: 1909), பொன்னம்பலம் இராமநாதன் (ஆண்டு: 1919), டி.ஆர். திருவேங்கடம் பிள்ளை (ஆண்டு: 1922), அருணாசலக் கவிராயர் (ஆண்டு: 1923) ஆகியோர்.
சரவணப் பெருமாள் ஐயரின் உரை மறுபதிப்பாக 1902இலும், வேதகிரி முதலியாரின் உரை மறுபதிப்பாக 1913இலும் வெளியாயின. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் மதிப்புக்குரியதாக விளங்கிய சரவணப் பெருமாள் ஐயர் உரைக்கு இக்காலப் பகுதியில் அவ்வளவாகச் சிறப்பிடம் தரப்பட்டுள்ளதாக அறிய முடியவில்லை.
இக்கால கட்டத்தில் திருக்குறளுக்குத் தமிழறிஞர்களே ஆங்கில மொழிபெயர்ப்புகள் வழங்கியது என்பது ஒரு புதிய முயற்சியாகும். பெரிதும் பரிமேலழகருரையை ஒட்டியே அமைந்த மூன்று ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாயின. அவற்றை எழுதி வெளியிட்டோர் கீழ்வருவோர்:
- வ.வே.சு. ஐயர்
- கோ. வடிவேலு செட்டியார்
- எ. சபாரத்தின முதலியார்
பரிமேலழகர் உரையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்னும் நிலையிலிருந்து மாறி, திருக்குறளுக்கு அணுக்க உரை காண வேண்டும் என்னும் உந்துதலும் ஆய்வுலகில் இக்கால கட்டத்தில் எழுந்துள்ளது. அதற்கு அரசஞ்சண்முகனார் 1921இல் எழுதிய முதற்குறள் விருத்தி என்னும் நூலே சான்று.
பரிமேலழகர் உரைத்திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டோர் சிலர்; திருக்குறள் வடமொழி சார்ந்து இயற்றப்பட்ட நூலே என்ற எண்ணத்தில் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும் நோக்குடன் பரிமேலழகர்பால் பற்றுக்கொண்டோர் வேறுசிலர் என்ற நிலை இக்காலகட்டத்தில் எழுந்தது.
இப்பின்னணியில் தமிழ் எழுச்சி உருவாகி, பரிமேலழகர் உரைக்கு மாற்றாக மணக்குடவர் உரையை அச்சிட்டுக் கொண்டுவர வேண்டும் என்னும் உந்துதல் எழுந்தது. செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் முதன்முதல் மணக்குடவர் உரையில் ஒரு பகுதியாகிய அறத்துப்பால் உரையை வெளியிட்டார். இந்த உரை 1917இல் வெளிவந்தது. 1925இல் மணக்குடவர் உரை முழுவதையும் கா. பொன்னுசாமி நாட்டார் வெளியிட்டார்.
திருக்குறளை நன்கு அறிய வேண்டுமென்றால், சொல் அடைவும் கடின சொற்களுக்குப் பொருளும் அறிந்துகொள்ள வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கில் திருக்குறளுக்குச் சொற்குறிப்பும் அகராதியும் மார்க்கசகாயம் செட்டியார் என்பவரால் கொண்டுவரப்பட்டது (1924).
பரிமேலழகரை உயர்த்தி திருக்குறளைத் தாழ்த்தும் எண்ணம் சிலர் கொண்டிருந்ததால் அதற்கு எதிர்வினையாக பரிமேலழகரின் உரைக்கு எதிர்ப்பு எழுந்து, அவ்வுரையின் நிறைகுறைகளை ஆராயும் போக்கு தோன்றியதோடு, தனித்தமிழ் உணர்வும் கால்கொள்ளத் தொடங்கியது.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்
தொடர் வரிசை எண்
அச்சிடப்பட்ட ஆண்டு
ஆசிரியர் பெயர்
நூல் பெயர்த் தலைப்பு
அச்சகம்/பதிப்பகம்
குறிப்புகள்
45
1928
திருநாவுக்கரசு முதலியார்
திருக்குறள் பரிமேலழகருரை
வாவிள்ள ராமசாமி சாஸ்துருலு அண்டு சன்ஸ்
பரிமேலழகருரை
46
1928
கா.சுப்பிரமணிய பிள்ளை
திருக்குறள் தெளிபொருள் விளக்கம்
கழகம், சென்னை
-----
47
1929
காயாமொழி குமரகுருபரர்
திருக்குறள் அறம்
கோல்டன் அச்சகம், சென்னை
-----
48
1929
கி. வீரராகவன்
திருக்குறள்
குமரன் அச்சகம், காஞ்சிபுரம்
-----
49
1931
டி.எ. பரமசிவன் பிள்ளை
திருக்குறள் சாரம் - 108 அதிகாரமும் வசனமும்
-----
-----
50
1932
ஆ. அரங்கநாத முதலியார்
திருக்குறள் மூலமும் பொழிப்புரையும்(ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
பி. என். அச்சுக்கூடம், சென்னை
-----
51
1933
ஆ. அரங்கநாத முதலியார்
திருக்குறள் மூலமும் பொழிப்புரையும் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகளின் சில பண்புகள்
இந்தக் காலப் பகுதியில் இரண்டு பேரியக்கங்கள் தமிழகத்தில் தோன்றி வேர்கொண்டுள்ளன: ஒன்று, திராவிட இயக்கம், மற்றொன்று தனித்தமிழ் இயக்கம். இந்த இரண்டு இயக்கங்களுமே திருக்குறளுக்கு முதன்மை தந்தன.
தனித்தமிழ் இயக்கம், திருக்குறளை ஒரு தனித்தமிழ் நூலாக அணுகியது. திருக்குறள் தமிழர்களின் தனிச் சிந்தனைகளின் உள்ளடக்கம்; அதில் வடமொழிச் சிந்தனைகளின் தாக்கங்கள் இல்லை; அப்படி ஒருசில இடங்களில் இருப்பதுபோல் தோன்றினும் அது வடமொழியாளர் சிந்தனைகளுக்கான எதிர்ப்புணர்வுகளே என்னும் பார்வையைத் தனித்தமிழ் இயக்கம் முன்வைத்தது. திருக்குறளின் அறத்துப்பால் மனுசிமிருதியைத் தழுவியது என்றும், பொருட்பால் அர்த்தசாஸ்திரத்தைத் தழுவியது என்றும், காமத்துப்பால் காமசூத்திரத்தைத் தழுவியது என்றும் முன்வைக்கப்பட்ட கருத்துருவாக்கங்களைத் தனித்தமிழ் இயக்கத்தார் மறுத்து, அவற்றிற்கிடையிலான வேறுபாடுகளை இனம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
திராவிட இயக்கத்தவர்கள் திருக்குறள் தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பைப் பெற்றவுடன் அதனைப் பாமர மக்களிடம் கொண்டுசெல்லும் பெருமுனைப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அப்படிக் கொண்டு செல்லும்போது, திருக்குறள் ஒரு பகுத்தறிவு நூல் என்னும் நோக்கில் கொண்டுசெல்லத் திட்டமிட்டனர்.
இவ்வாறு, தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் என்னும் இவ்விரு இயக்கங்களின் எழுச்சியால் திருக்குறளுக்கான இரண்டாவது எழுச்சிக் காலம் உருவாக்கம் பெற்றுள்ளது.
இந்த இரு பேரியக்கங்களால் திருக்குறள் ஆய்வுகள் புதிய பரிணாமங்களைப் பெற்றன. தனித்தமிழ் இயக்கத்தவர்களுள் ஒரு சிலர், பரிமேலழகரின் வடவர் சார்புக் கருத்துகளை மறுத்து, அதில், தமிழர்களின் சமயமான சைவம் சார்ந்த கருத்துகளே பெரிதும் உள்ளன என்னும் கருதுகோளை நெஞ்சில் வைத்துத் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். வேறு சிலர் திருக்குறள் ஒரு சமயச் சார்பற்ற நூல் என்னும் நோக்கில் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.
திராவிட இயக்கத்தவர்கள், திருவள்ளுவர் ஒரு கடவுள் மறுப்பாளர் என்னும் நோக்கில் தங்கள் கருத்துகளை முன்வைத்துத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பரிமேலழகர் உரை இவ்விரு இயக்கத்தாரின் பார்வைக்கும் அடிப்படை இலக்காகியது.
1926-1950 காலகட்டத்தில் பரிமேலழகரின் உரை அப்படியே அச்சானது இருமுறை மட்டுமே (ஆண்டுகள்: 1928; 1947). இரு உரைகளும் சென்னையிலிருந்தே வெளியாயின. இரு உரைநூல்கள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக வெளியாயின (ஆ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1937; கு. சடகோப ராமானுஜாச்சாரியார், 1937). 1901-1925 காலகட்டத்தில் வெளிவந்த உரைகளுள் மு.ரா. அருணாசலக் கவிராயரின் திருக்குறள் மூலமும் தெளிபொருள் வசனமும் என்னும் உரை நூல் மட்டும் இக்காலப்பகுதியில் இருமுறை மீண்டும் பதிக்கப்படும் சிறப்பினைப் பெற்றது.
1926-1950 காலகட்டத்தில் ஏற்பட்ட சமுதாய விழிப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட தனித்தமிழ் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் ஆகியவற்றின் விளைவாகத் திருக்குறளுக்குப் பல புதிய உரைகள் தோன்றின. அவற்றுள் பல உரைகள் பேரளவு பரிமேலழகரின் உரையைத் தழுவியனவாக உள்ளன. ஒரு சில குறட்பாக்களுக்குப் புதிய விளக்கங்களும் தரப்பட்டன. இவ்வகையில் வெளியான உரைநூல்கள் 17. அவற்றுள் ஆ. அரங்கநாத முதலியார் வெளியிட்ட நூல் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டிருந்தது.
தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கம் பெற்ற நிலையில் சில சான்றோர் பெருமக்கள் திருக்குறளுக்குப் புத்துரை காண முயன்றுள்ளனர். இவ்வாறு புதுமை புகுத்தி உருவான உரை நுல்கள் இவை:
- வ.உ. சிதம்பரம் இயற்றிய "திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன்" என்ற நூல் (1935)
- முனைவர் வ.சுப. மாணிக்கம் இயற்றிய "உரைநடையில் 1330 திருக்குறள்" என்ற நூல் (1936)
- திரு. வி. கலியாண சுந்தரனார் இயற்றிய "திருக்குறள் விரிவுரை - பாயிரம்" என்ற நூல் (1939)
- அவரே இயற்றிய "திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால் - இல்வாழ்க்கையியல்"என்ற நூல் (1941)
- மு. வரதராசனார் இயற்றிய "திருக்குறள் தெளிவுரை" என்ற நூல் (1949)
- புலவர் அ.மு. குழந்தை இயற்றிய "திருக்குறள் குழந்தையுரை" என்ற நூல் (1949)
இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்
இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகளின் சில பண்புகள்
1951 முதல் 1975 வரையிலான இந்தக் கால கட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவை:
-திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது.
- இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு 1968இல் சென்னையில் நடைபெற்றமை
- மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அமைத்தமை
- தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் இருக்கைகள் அமைத்தமை, சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டியமை, சட்டமன்றம் கூடும்போது ஒரு குறள் சொல்லித் தொடங்கவேண்டும் என்னும் வரைவு உருவாக்கம் பெற்றமை, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்கும் அரசு ஆணை உருவாக்கம் பெற்றமை போன்ற திருக்குறள் சார்ந்த நிகழ்வுகள் இக்காலத்தில் நடந்தன. இதனால் திருக்குறள் விழிப்புணர்வு வளர்ந்தது.
சென்ற கால்நூற்றாண்டைவிட இந்தக் கால்நூற்றாண்டில் பரிமேலழகர் உரைப் பதிப்புகள் கூடுதலான எண்ணிக்கையில் வெளிவந்துள்ளதைக் காணமுடிகிறது. சில புகழ்வாய்ந்த பதிப்பகங்கள் அந்த உரையை வெளியிட முன்வந்தன. அவை: பி. இரத்தினநாயகர் சன்ஸ் (சென்னை); கழகம் (சென்னை); கஜபதி நாயகர், வள்ளுவர் ஆலயம் (சென்னை); காசிமடம் (திருப்பனந்தாள்); சக்தி காரியாலயம் (சென்னை); அழகுப் பதிப்பகம் (காரைக்குடி); பாரதி பதிப்பகம் (சென்னை); பழநியப்பா பிரதர்ஸ் (சென்னை); வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் (சென்னை); புலியூர்க்கேசிகன், பூம்புகார் பதிப்பகம் (சென்னை).
1960களில் மட்டும் பாரதி பதிப்பகத்தார் பரிமேலழகர் உரையை ஆறு பதிப்புகள் வெளிட்டுள்ளதைக் காண முடிகிறது. இது இக்காலத்தில் அந்த உரைக்கு இருந்த வரவேற்பைக் காட்டுகிறது. பரிமேலழகருரையை எதிர்த்து தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் கருத்துகளைத் தெரிவித்துவந்த நிலையில், அதனைப் பலரும் அறிய வேண்டும் என்று எண்ணிய எண்ணமும், எதிர்ப்புக்கு எதிரான எண்ணமும் இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் காரணங்களாகி இருக்கலாம்.
கிருஷ்ணசாமி நாயுடு, வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், ஆர். கன்னியப்ப நாயக்கர் ஆகியோர் பரிமேலழகருரையைப் பரப்பும் நோக்கத்துடன் அதன் மறுபதிப்புகளை வெளியிட்டனர்.
ஆயினும் இந்த 25 ஆண்டுக்கால கட்டத்தில் வெளியிடப்பட்ட உரைநூல்களுள் பல பரிமேலழகருரையின் அணுகுமுறையினின்று வேறுபட்டுச் செல்கின்ற புதுமுறை உரைகளாக உள்ளன.
பரிமேலழகர் உரை தவிர பண்டைய உரையாசிரியர்களான மணக்குடவர், காலிங்கர், பரிப்பெருமாள், பரிதியார் ஆகியோரின் உரைகளும் இக்காலப் பகுதியில் வெளிவந்துள்ளன.
வித்துவான் ச. தண்டபாணி தேசிகரின் திருக்குறள் உரைவளம், இரா. சாரங்கபாணியின் திருக்குறள் உரை வேற்றுமைகள், திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட திருக்குறள் உரைக்கொத்து, கி.வா. ஜகந்நாதனின் திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, மு. சண்முகம் பிள்ளையின் திருக்குறள் அமைப்பும் முறையும் ஆகியவையும் இக்காலப் பகுதியில் வெளிவந்தன. இவை திருக்குறளை ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வைக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தன.
தனித்தமிழ் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் "திருக்குறள் தமிழ் மரபுரை" என்னும் உரைநூலும் இக்காலப் பகுதியில் வெளியானது. புலவர் குழந்தையின் உரை பல பதிப்புகளாக இக்காலத்தில் வெளிவந்தது.
மொத்தத்தில் இந்தக் காலப் பகுதி திருக்குறளுக்கான ஒரு எழுச்சிமிகு காலப் பகுதியாகத் தோற்றம் அளிக்கிறது. திருகுறளுக்கான மூன்றாவது எழுச்சிக் காலப் பகுதியாக இந்தப் பகுதி அமைகிறது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில் அச்சான திருக்குறள் உரைகள்
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில் அச்சான திருக்குறள் உரைகளின் சில பண்புகள்
1976-2000 ஆண்டுக் கால கட்டத்தில் திருக்குறள் சார்ந்த பல நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிடலாம். மதுரையில் 1981இலும் தஞ்சையில் 1995இலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்தேறின. 1976இல் வள்ளுவர் கோட்டம் திறந்துவைக்கப்பட்டது. திருக்குறள் பேரவை, குறளாயம், உலகத் திருக்குறள் மையம் என்னும் அமைப்புகள் தோன்றின. தமிழக அரசு திருக்குறள் ஆய்வில் சிறந்த சான்றோருக்கு திருவள்ளுவர் விருது வழங்குவதாக 1986இல் அறிவித்தது. 2000ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களிடையே திருக்குறள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியெழுப்பும் காரணிகள் ஆயின.
பரிமேலழகர் உரைகள் சில இக்காலத்தில் வெளிவந்தாலும், புதிய உரைகள் மிகப்பல இக்காலத்தில் வெளியிடப்பட்டன. மேலும் பண்டைய உரையாசிரியர்களை ஒப்பிட்டு நோக்கும் நூல்களும் வெளியிடப்பட்டன.
மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகரின் "திருக்குறள் உரைக்களஞ்சியம்" ஏழு தொகுதிகளாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழி வெளிவந்தது. முனைவர் இரா. சாரங்கபாணியின் "திருக்குறள் உரைவேற்றுமை" மூன்று தொகுதிகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழி வெளிவந்தது. இவை இரண்டு தொகுப்புகளும் முன்பு வந்த தொகுப்பாய்வுகளின் விரிநிலைகளாகும். இந்தத் தொகுப்புரைகள் வெளிவந்துள்ளதால், பழைய உரையாசிரியப் பெருமக்களின் உரைகளை வெளியிடும் பதிப்புகள் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
ஏறத்தாழ 90 அறிஞர்கள் இக்காலப் பகுதியில் திருக்குறள் புத்துரைகள் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்தக் காலப்பகுதியைப் புத்துரைகளின் எழுச்சிக் காலம் என்று கூறலாம். இவற்றுள் சமயச் சார்புரைகளும் கடவுள் மறுப்புக் கோட்பாட்டர்கள் உரைகளும் அடங்கும்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் திருக்குறள் உரைகள்
தொடர் வரிசை எண்
அச்சிடப்பட்ட ஆண்டு
ஆசிரியர் பெயர்
நூல் பெயர்த் தலைப்பு
அச்சகம்/பதிப்பகம்
குறிப்புகள்
229
2001
முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
திருக்குறள் நயவுரை
-----
-----
230
2001
ஆர். பொன்னம்மாள்
திருக்குறள்
-----
-----
231
2001
கவி. குறளேழுவர்
அணிநலம் கொழிக்கும் திருக்குறள்
-----
-----
232
2001
புலவர் குடந்தையான்
திருக்குறள் ஒரு பகுத்தறிவுப் பார்வை
பல்லவநாதம் இலக்கிய வெளியீடு, சென்னை
-----
233
2002
புலவர் வ. சங்கரன்
திருக்குறள் தெளிபொருள்
-----
-----
234
2002
புலவர் ஆ. காளத்தி
திருக்குறள் தெளிவுரை
-----
-----
235
2002
முனைவர் செ. உலகநாதன்
திருக்குறள் செந்தமிழ் உரை
-----
-----
236
2002
அழகர் சுப்பராஜ்
திருக்குறள் அறிவுரை
-----
-----
237
2002
ஜெ. நாராயணசாமி
திருக்குறள் ஆங்கில உரையுடன்
சுரா புக்ஸ், சென்னை
-----
238
2002
எஸ். கெளமாரீஸ்வரி
திருக்குறள் பரிமேலழகர் உரை
சாரதா பதிப்பகம், சென்னை
-----
239
2003
டாக்டர் பெ. கிருஷ்ணன்
திருக்குறள் தெளிவுரை
-----
-----
240
2003
பகலவன்
திருக்குறள் கருத்துரை
-----
-----
241
2003
புலவர் கோ. இளையபெருமாள்
எளிய உரையில் உலகப் பொதுமறை
-----
-----
242
2003
தொ. பரமசிவன்
திருக்குறள்
-----
-----
243
2003
அ.மா. சாமி
திருக்குறள் செம்பதிப்பு (கருத்துரை)
நவமணி பதிப்பகம், சென்னை
-----
244
2003
கே. சேதுராமன்
திருக்குறள் அறத்துப்பால் ஆராய்ச்சி விளக்க உரை
-----
-----
245
2003
முல்லை பி.எல். முத்தையா
திருக்குறள் எளிய தமிழ் உரையுடன்
-----
-----
246
2003
ச. மெய்யப்பன் (பதிப்பாசிரியர்)
திருக்குறள் - மணக்குடவர் உரை
மணிவாசகர் பதிப்பகம், சென்னை
-----
247
2004
டாக்டர் கே. என். சரஸ்வதி, பேராசியர் பா. அர்த்தநாரீஸ்வரர்
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் திருக்குறள் உரைகளின் சில பண்புகள்
2001-2006 காலகட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட சான்றோர்கள் திருக்குறளுக்குப் புதிதாக உரைகள் எழுதியுள்ளனர். பழைய உரைகளுள் பரிமேலழகர் உரை மட்டும் சில பதிப்புகள் வெளிவந்துள்ளன.
10ஆம் நூற்றாண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை திருக்குறளுக்கு உரை எழுதியோரின் தொகுப்புப் பட்டியல்
விபரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள்: 18. ஆக, மொத்த உரையாசிரியர்கள்: 220
குறிப்புகள்
1901 முதல் 1920 வரையிலான காலப்பகுதியில் பரிமேலழகர் உரைக்குப் பெரும் மதிப்பிருந்த காரணத்தால் புதிய உரையாசிரியர்கள் அதிகமாக உருவாக்கம் பெறவில்லை.
1971 முதல் 1980 வரையிலான காலத்தில் உரையாசிரியர்கள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி காணப்படுகிறது. இதற்கு அக்காலப் பகுதியில் நிலவிய அரசியல் போக்குகளே பெரும் காரணங்கள் என்று கூறலாம்.
↑திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600108. முதல் பதிப்பு: செப்டம்பர் 2005.