குவெட்டா மாவட்டம்
குவெட்டா மாவட்டம் (Quetta Districts), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பலூசிஸ்தான் மாகாணத்தில் வடமேற்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் குவெட்டா நகரம் ஆகும். குவெட்டா நகரம், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்து நகரத்திற்கு தென்மேற்கில் 892 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அமைவிடம்![]() குவெட்டா மாவட்டம் வடக்கில் கரேசாத் மாவட்டம், கிழக்கில் ஹர்னாய் மாவட்டம் & சியாராத் மாவட்டம், தெற்கில் மஸ்துங் மாவட்டம், மேற்கில் கில்லா அப்துல்லா மாவட்டம் மற்றும் தென்மேற்கில் ஆப்கானித்தான் நாடும் எல்லைகளாக கொண்டுள்ளது. மாவட்ட நிர்வாகம்குவெட்டா மாவட்டம் சில்ட்டான் வட்டம், சர்கூன் வட்டம், பாஞ்ச்பாய் வட்டம், சதர் வட்டம், குச்சியாக் வட்டம், சரியப் வட்டம் என 6 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 2,88,459 குடியிருப்புகளும் கொண்ட குவெட்டா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,95,492 ஆகும். பாலின விகிதம் 103.48 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 56.29% ஆகும்.[2][3]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7,20,934 (31.74%) உள்ளனர்.[4] 1,565,546 (60.32%) மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்ற்னர்.[2] சமயங்கள்குவெட்டா மாவட்டத்தில் இசுலாம் 98.59%, கிறித்தவம் 1.1% மற்றும் பிற சமயங்கள் 0.31% வீதம் பயில்கின்றனர்.[5] மொழிகள்இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழியை 59.95% பேரும், பிராகுயி மொழியை 15.51% பேரும், பலூச்சி மொழியை 7.38% பேரும், பஞ்சாபி மொழியை 2.95% பேரும், உருது மொழியை 2.56 பேரும், சிந்தி மொழியை 1.34% பேரும், சராய்கி மொழியை 1.09% பேரும், இந்த்கோ மொழியை 0.82% பேரும் மற்றும் பிற மொழிகளை 8.4% பேரும் பேசுகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia