சுங்கை பத்து
சுங்கை பத்து அல்லது சுங்கை பத்து தொல்பொருள் தளம் (ஆங்கிலம்: Sungai Batu அல்லது Sungai Batu Archaeological Site; மலாய்: Tapak Arkeologi Sungai Batu; சீனம்: 双溪峇都考古遗址; ஜாவி: موقع سونغاي باتو الأثري; சயாம்: แหล่งโบราณคดีสุไหงบาตู); என்பது மலேசியா, கெடா, கோலா மூடா மாவட்டத்தில் மெர்போக் கிராமப்புறப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தொல்பொருள் தளமாகும்.[3] இந்தத் தளம் 1-ஆம் - 3-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பல இந்து - பௌத்தக் கோயில்களின் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இந்தத் தளம் கி.மு. 535 முதல் இங்கு நிலைத்து வருவதாகவும் நம்பப் படுகிறது.[4] இங்கு கிடைக்கப் பெற்ற மண்பானைகள், மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். [3] தள விளக்கம்![]() சுங்கை பத்து ஆய்வு மையம், சுங்கை பட்டாணி நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சுங்கை பத்துவின் மண் சிதைவுகள்; கரியச் சிதைவுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக தொல்பொருளியல் ஆய்வுத் துறை (Centre for Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) ஆய்வுகள் செய்து உறுதிபடுத்தி உள்ளது.[4] இரும்பு ஏற்றுமதியில் ஈடுபட்டு இருந்ததாக நம்பப்படும் வணிகக் கப்பல்கள் இந்தத் தளத்தில் 2000 ஆண்டுகள் புதைந்து கிடப்பதாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உறுதிபடுத்தி உள்ளனர்.[5] கடாரத்து நாகரிகம்![]() கடாரத்து நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும் ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது எனவும் அறியப்பட்டு உள்ளது. மலாக்கா வரலாறு; சிங்கப்பூர் வரலாறு; சுமத்திரா ஜாவா வரலாறு; ஆகிய வரலாறுகளைக் காட்டிலும் கடாரத்து வரலாறு என்பது முதன்மையான வரலாறு என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.[4] கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்; ஜாவாவில் உள்ள போரோபுதூர் புராதன ஆலயங்களுக்கு முன்னரே கடாரத்து நாகரிகம் உருவாகி விட்டது என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொக்தார் சைடின் (Prof Datuk Dr Mokhtar Saidi) கூறுகிறார்.[4]
என்று வாண்டர்பில்ட் மெசோ அமெரிக்கக் கல்விக் கழகத்தின் (Vanderbilt Institute of Mesoamerica) ஆர்தர் டெமரெசுட் (Arthur Demarest) எனும் கல்வியாளர் கூறுகிறார்.[6][7] தொல்லியல் கண்டுபிடிப்புகள்![]() கெடா மாநிலத்தில் உள்ள இந்தச் சுங்கை பத்துவில் 4 கி.மீ2 பரப்பளவில் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டன. அந்த இடங்களின் அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் மூலமாக, கி.மு. 788-ஆம் ஆண்டிலேயே வரலாற்றுக்கு முந்தைய ஒரு நாகரிகம் அங்கு இருந்தது தெரிய வருகிறது.[8] சுங்கை பத்துவில் உள்ள தொல்பொருள் தளங்களின் கண்டுபிடிப்பு; அந்தக் காலக்கட்டத்தில் இரும்புத் தாது உருக்குதல்; மற்றும் வர்த்தகத்தில் ஒரு செழிப்பான நிலையில் இருந்ததற்கான சான்றுகளைக் காட்டுகின்றது. சுங்கை பத்துவின் நாகரிகம் என்பது பண்டைய பண்டைய ரோமாபுரி நாகரிகம் (Ancient Rome) நிறுவப் படுவதற்கு முந்தையது. அந்த வகையில் சுங்கை பத்துவின் நாகரிகம் தென்கிழக்கு ஆசியாவின் பழமையான நாகரிகமாக (Oldest civilization in Southeast Asia) மாறி உள்ளது.[9] ![]()
![]() மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia