கெடா மாநில சட்டமன்றம்
கெடா மாநில சட்டமன்றம் அல்லது கெடா சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Negeri Kedah; ஆங்கிலம்: Kedah State Legislative Assembly; சீனம்: 吉打州议会) என்பது மலேசியா, கெடா மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.[1] மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான கெடா மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். கெடா மாநில சட்டமன்றம் 36 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[2] கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் மாநகரில் அமைந்துள்ள விஸ்மா டாருல் அமான் (Wisma Darul Aman) வளாகத்தில்; கெடா மாநிலப் பேரவை கூடுகிறது. பொதுகெடா மாநில சட்டமன்றம் கெடா மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். கெடா மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. கெடா மாநில சட்டமன்றம், மலாக்கா மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் உரிமைமலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன. நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை கெடா சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும். சபாநாயகர் தலைமைகெடா மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் சுகாரி புலாட் (Juhari Bulat). சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி முதலமைச்சர் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார். கெடா வரலாறுகெடா மாநிலத்தின் வடக்கே, பெர்லிஸ் மாநிலம்; மற்றும் தாய்லாந்தின் சொங்க்லா (Songkhla) மாநிலம்; யாலா (Yala) மாநிலம்; தெற்கே பேராக் மாநிலம் மற்றும் தென்மேற்கில் பினாங்கு; ஆகிய மாநிலங்கள் உள்ளன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது. கெடா மாநிலத்தின் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). 'அமைதியின் வாழ்விடம்' என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. பொதுவாக, கெடா சமதரையான நில அமைப்பைக் கொண்டது. இங்கு அதிகமாக நெல் விளைவிக்கப் படுகிறது. அதனால் தான் இந்த மாநிலத்தை 'மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம்' (Rice Bowl of Malaysia) என்று அன்பாக அழைக்கிறார்கள். மெர்போக் குடியேற்றம்கி.மு. 788-இல், கெடாவில் ஒரு பெரிய குடியேற்றத்திற்கான அரசாங்கம் மெர்போக் ஆற்றின் வடக்குக் கரையைச் சுற்றி நிறுவப்பட்டு உள்ளது. அந்தக் குடியேற்றம் பூஜாங் பள்ளத்தாக்கின் ஒரு பெரிய பகுதியைக் கொண்டு இருந்தது. மெர்போக் ஆறு மற்றும் மூடா ஆறு ஆகிய இரு ஆறுகளின் படுகைகள், சுமார் 1000 சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கியவை. குடியேற்றத்தின் தலைநகரம் மெர்போக் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தது. இந்தப் பகுதி இப்போது சுங்கை பத்து என்று அழைக்கப்படுகிறது.[3] அரசாங்கமும் அரசியலும்அரசியல் சாசனப் படி சுல்தான் தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். மாநிலத்தில் இசுலாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார். கெடா மாநிலத்தில் இப்போது சுல்தான் சல்லேவுதீன் பாட்லிஷா என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 2017-ஆம் ஆண்டில் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார்.[4] மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர். இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார். தற்போதைய கெடா சட்டமன்றம் (2022)
கெடா முதலமைச்சர்கள் பட்டியல்
மேற்கோள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia