கோபால்ட்(II) ஆக்சைடு(Cobalt(II) oxide or cobalt monoxide) என்பது CoO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். சிவப்பு ஆலிவ் பச்சை படிகங்களாக அல்லது சாம்பல் அல்லது கருப்பு தூளாக இச்சேர்மம் தோற்றமளிக்கிறது[3] . பீங்கான் தொழிலில் நீலநிறப் பளிங்கை உருவாக்கும் கூட்டுப்பொருளாகவும் மிளிரியாகவும் வேதித் தொழிற்சாலைகளில் கோபால்ட்(II) உப்புகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
கோபால்ட் ஐதராக்சைடை வெப்ப நீர்நீக்கம் செய்து பின்னர் வீழ்படிவாக்கும் முறையிலும் கோபால்ட்(II) ஆக்சைடை தயாரிக்கப்படுகிறது.
CoX + 2 KOH → Co(OH)2 + K2X
Co(OH)2 → CoO + H2O
வினைகள்
கோபால்ட்(II) ஆக்சைடு கனிம அமிலங்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய கோபால்ட் உப்புகளை உருவாக்குகிறது.
CoO + 2 HX → CoX2 + H2O
பயன்பாடுகள்
பல நூற்றாண்டுகளாக மட்பாண்டத் தொழிலில் வண்ணமூட்டும் முகவராகக் கோபால்ட்(II) ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இக்கூட்டுப்பொருள் ஆழ்ந்த நீல நிறத்தை (கோபால்ட் நீலம்) வழங்குகிறது. கோபால்ட்(II) ஆக்சைடின் பட்டை இடைவெளி சுமார் 2.4 எலக்ட்ரான் வோல்ட் ஆகும் கோபால்ட் நீலக் கண்ணாடிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
↑Kannan, R.; Seehra, Mohindar S. (1987). "Percolation effects and magnetic properties of the randomly diluted fcc system CopMg1-pO". Physical Review B35 (13): 6847. doi:10.1103/PhysRevB.35.6847.
↑Silinsky, P. S.; Seehra, Mohindar S. (1981). "Principal magnetic susceptibilities and uniaxial stress experiments in CoO". Physical Review B24: 419. doi:10.1103/PhysRevB.24.419.
↑US 4389339, "Process for making a cobalt oxide catalyst"