கோபால்ட்(II) பெர்குளோரேட்டு

அறுநீரேற்று
|
பெயர்கள்
|
முறையான ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) இருபெர்குளோரேட்டு
|
வேறு பெயர்கள்
- கோபால்டசு பெர்குளோரேட்டு
- கோபால்ட் இருபெர்குளோரேட்டு
|
இனங்காட்டிகள்
|
|
13455-31-7
|
ChemSpider
|
24278
|
EC number
|
236-653-5
|
InChI=1S/2ClHO4.Co/c2*2-1(3,4)5;/h2*(H,2,3,4,5);/q;;+2/p-2 Key: BSUSEPIPTZNHMN-UHFFFAOYSA-L InChI=1S/2ClHO4.Co.6H2O/c2*2-1(3,4)5;;;;;;;/h2*(H,2,3,4,5);;6*1H2/q;;+2;;;;;;/p-2 Key: KPOBHNYTWJSVKF-UHFFFAOYSA-
|
யேமல் -3D படிமங்கள்
|
Image Image
|
பப்கெம்
|
26064
|
[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Co+2] [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Co+2].O.O.O.O.O.O
|
பண்புகள்
|
|
Co(ClO4)2
|
வாய்ப்பாட்டு எடை
|
257.83 கி/மோல்
|
தோற்றம்
|
இளஞ்சிவப்பு நிறத் திண்மம் (நீரிலி) அடர்-சிவப்பு படிகங்கள் (அறுநீரேற்று)
|
அடர்த்தி
|
3.33 கி/செ.மீ3
|
உருகுநிலை
|
170 °C (338 °F; 443 K)[1] (சிதைவு, அறுநீரேற்று)
|
|
113 கி/100 மி.லி (25 °செல்சியசு)
|
கரைதிறன்
|
எத்தனால், அசிட்டோன் கரைப்பான்களில் கரையாது.
|
தீங்குகள்
|
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
|
Fisher SDS
|
GHS pictograms
|
 
|
GHS signal word
|
அபாயம்
|
தொடர்புடைய சேர்மங்கள்
|
ஏனைய நேர் மின்அயனிகள்
|
இரும்பு(II) பெர்குளோரேட்டு நிக்கல்(II) பெர்குளோரேட்டு
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
கோபால்ட்(II) பெர்குளோரேட்டு (Cobalt(II) perchlorate) என்பது Co(ClO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Co(ClO4)2·nH2O (n = 0,6) என்ற பொது வாய்ப்பாட்டாலும் கோபால்ட்(II) பெர்குளோரேட்டை அடையாளப்படுத்தலாம். கோபால்ட்(II) பெர்குளோரேட்டின் இரண்டு வடிவங்களான இளஞ்சிவப்பு நீரிலியும் சிவப்பு அறுநீரேற்றும் நீர் உறிஞ்சும் திடப்பொருட்களாகும்.
தயாரிப்பு
கோபால்ட்(II) பெர்குளோரேட்டு அறுநீரேற்றை, கோபால்ட்டு உலோகம் அல்லது கோபால்ட்(II) கார்பனேட்டை பெர்குளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து கரைசலை ஆவியாக்குவதன் மூலம் தயாரிக்கலாம்.[1]
- CoCO3 + 2 HClO4 → Co(ClO4)2 + H2O + CO2
அறுநீரேற்றை வெப்பப்படுத்துவதன் மூலம் நீரற்ற வடிவத்தை உருவாக்க முடியாது. ஏனெனில் அது 170 °செல்சியசு வெப்பநிலையில் கோபால்ட்(II,III) ஆக்சைடாக சிதைவடைகிறது. அதற்கு பதிலாக, டைகுளோரின் எக்சாக்சைடுடன் கோபால்ட்(II) குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து 75 °செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் நீரற்ற கோபால்ட்(II) பெர்குளோரேட்டை தயாரிக்கலாம்.[1][2]
கட்டமைப்பு
நீரற்ற வடிவம் எண்முக Co(ClO4)6 மையங்களைக் கொண்டுள்ளது. இகட்டமைப்பில் முப்பல் பெர்குளோரேட்டு ஈந்தணைவிகள் உள்ளன.[3] மறுபுறம், நேர்ச்சாய்சதுர அறுநீரேற்று தனிமைப்படுத்தப்பட்ட [Co(H2O)6]2+ எண்முகிகள் மற்றும் a = 7.76 Å, b = 13.44 Å மற்றும் c = 5.20 Å என்ற அணிக்கோவை அளவுருக்கள் கொண்ட பெர்குளோரேட்டு எதிர்மின் அயனிகளைக் கொண்டுள்ளது. அறுநீரேற்று குறைந்த வெப்பநிலையில் கட்ட மாற்றங்களுக்கு உட்படுகிறது.[4][5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 F. Solymosi; J. Raskó (1977). "Study of the thermal decompositions of some transition metal perchlorates" (in en). Journal of Thermal Analysis and Calorimetry 11 (2): 289–304. doi:10.1007/bf01909967.
- ↑ Jean-Louis Pascal; Jacqueline Potier; Cheng Shan Zhang (1985). "Chlorine trioxide, Cl2O6, a most efficient perchlorating reagent in new syntheses of anhydrous metal perchlorates, chloryl and nitryl perchloratometalates of cobalt(II), nickel(II), and copper(II). Reactivity of chlorine trioxide with anhydrous or hydrated chlorides and nitrates" (in en). Journal of the Chemical Society, Dalton Transactions 2 (2): 297–305. doi:10.1039/DT9850000297.
- ↑ J. L. Pascal; J. Potier; D. J. Jones; J. Roziere; A. Michalowicz (1985). "Structural approach to the behavior of perchlorate as a ligand in transition-metal complexes using EXAFS, IR, and Raman spectroscopy. 2. Crystal structure of M(ClO4)2 (M = Co, Ni). A novel mode of perchlorate coordination" (in en). Inorganic Chemistry 24 (2): 238–241. doi:10.1021/ic00196a026.
- ↑ M.B. Patel; Sushama Patel; D.P. Khandelwal; H.D. Bist (1983). "Vibrational studies and phase transitions in Co(ClO4)2·6H2O and Mn(ClO4)2·6H2O" (in en). Chemical Physics Letters 101 (1): 93–99. doi:10.1016/0009-2614(83)80311-X.
- ↑ A. K. Jain; G. C. Upreti (1975). "On the anomalous paramagnetism of Co(II) perchlorate hexahydrate at low temperatures" (in en). Journal of Physics C: Solid State Physics 8 (12): 1884–1888. doi:10.1088/0022-3719/8/12/013. Bibcode: 1975JPhC....8.1884C.