கோயில் நான்மணிமாலை

கோயில் நான்மணிமாலை [1] என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை வகையில் அமைந்த ஒரு நூலாகும். இது சிதம்பரத்தில் உள்ள சிவன் கோயில் தொடர்பாகப் பாடப்பட்ட ஒரு நூல். சிதம்பரம் கோயில் பொதுவாகக் கோயில் என்று வழங்கப்படுவது ஆகையால் இந்நூலின் பெயரும் "கோயில் நான்மணிமாலை" என வழங்குகிறது. நான்மணிமாலையின் இலக்கணத்துக்கு அமைய இந்நூல், வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்ற நான்கு பாவகைகளில் மாறி மாறி வரும் 40 பாடல்களைக் கொண்டு அந்தாதியாக அமைந்துள்ளது. இந்த இலக்கிய வகையில் அமைந்த முதல் நூல் இதுவே ஆகும்[2]. இதனை இயற்றியவர் பட்டணத்துப் பிள்ளையார் எனப்படும் பட்டினத்தடிகள் ஆவார். இந்நூல், நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கருப்பொருள்

இந் நூலில் நான்கு வகைக் கருப்பொருட்கள் அமைந்திருக்கக் காணலாம். இவை:

  1. சிவனின் பெருமைகள்
  2. அவர்தம் ஆடல்
  3. அகப்பொருள்
  4. தத்துவப் பொருள்

என்பவை ஆகும்[3].

பாடல் நடை

பூமேல் அயன்அறியா மோலி மௌலிப் புறத்ததே
நாமே புகழ்ந்(து)அளவை நாட்டுவோம் – பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.[4]

குறிப்புகள்

  1. கோயில் நான்மணிமாலை பாடல் மூலம்
  2. தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் பட்டப் படிப்புக்கான இலக்கிய வரலாறு பாடம் 6.3
  3. பழனியப்பன், மு
  4. நூலின் முதல் வெண்பா

உசாத்துணைகள்

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya