திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை

திருநரையூர் திருஇரட்டை மணிமாலை என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இரட்டைமணிமாலை ஒருவகைச் சிற்றிலக்கியம் திருநாரையூர் திருஇரட்டை மணிமாலை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி. காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம். கடலூர் மாவட்டம் திருநாரையூர் சிவபெருமானை இந்த நூல் போற்றிப் பாடுகிறது.

நூல் அமைதி

வெண்பா, கட்டளைக்கலித்துறை என்னும் இருவகைப் பாக்கள் மாறி மாறி அந்தாதித் தொடையோடு வர இந்த நூலிலுள்ள 20 பாடலிலுள்ள 20 பாடல்கள் அமைந்துள்ளன.

வெண்பா
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் – புன்னை
விரசுமகிழ் சோலைவியன் நாரையூர் முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.[1]
கட்டளைக்கலித்துறை
நாந்தன மாமனம் ஏத்துகண் டாய்என்று நாள்மலரால்
தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதித்தன்னுளே
சேர்ந்தன னேஐந்து செங்கைய னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேஎன்னை ஆண்டவ னேஎனக்(கு) என்னையனே. [2]

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. (நூலின் முதல் பாடல்) திருநாரையூர் அரசமரத்தடி ஆனைமுகன் என் துன்பம் போக்கி நினைவாக வருகிறான்.
  2. (நூலின் இறுதிப் பாடல்)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya