கோவிந்தசாமி பழனிவேல்
டத்தோ ஜி. பழனிவேல் அல்லது பழனிவேல் கோவிந்தசாமி (Palanivel s/o K. Govindasamy, மலாய்: G. Palaniveli; 1 மார்ச் 1949 – 17 சூன் 2025), என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; பாரிசான் நேசனல் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் 8-ஆவது தலைவர்; மலேசிய அமைச்சரவையில் அமைச்சராகவும்; துணை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் மலேசியா, பகாங், கேமரன் மலை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மே 2013 முதல் சூலை 2015 வரை மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், ஆகத்து 2011 முதல் மே 2013 வரை பிரதமர் துறை அமைச்சராகவும், தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் துணை அமைச்சராகவும், ஊரக வளர்ச்சி துணை அமைச்சராகவும், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சராகவும் பதவிகளை வகித்தவர்.[1] வாழ்க்கைக் குறிப்புபழனிவேல், 1949 மார்ச் 1-ஆம் தேதி பினாங்கு, ஜோர்ஜ் டவுன் நகரில் பிறந்தார். 1972-ஆம் ஆண்டில், மலாயா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடக்கக் காலத்தில் கோலாலம்பூரில் உள்ள கூன் கல்வி நிலையத்தில் ஆசிரியராகவும்; பின்னர் குவாந்தான் நகரில் உள்ள அடாபி கல்லூரியிலும் ஆசிரியராகவும் பணி புரிந்தார். அத்துடன் 1968-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய இந்திய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அதே 1972-ஆம் ஆண்டில், மலேசிய இந்திய காங்கிரசு பெட்டாலிங் கிளையின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசிய அருங்காட்சியகத்தில் ஆய்வாளர் பணிபின்னர் அவர் மலேசிய தேசிய அருங்காட்சியகத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தார். 1974-இல், அவர் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் பணிபுரிய பினாங்கு சென்றார். அங்கு செயல் இயக்குநராக பதவியில் அமர்த்தப்பட்டார். 1977-ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கத்தின் பெர்னாமா செய்தி நிறுவனத்தில் ஒரு பத்திரிகையாளராகச் சேர்ந்தார். அங்கு அவர் பொருளாதார செய்தி ஆசிரியராக பதவி உயர்த்தப்பட்டார். இந்தக் காலக் கட்டத்தில்தான் அவர் ம.இ.கா.வின் தலைவரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான ச. சாமிவேலு அவர்களுக்குச் செய்திச் செயலாளராகப் பணிபுரிய அழைக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்![]() 1990-ஆம் ஆண்டில் நாட்டின் பொதுத் தேர்தலில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2008 மார்ச் 8-ஆம் தேதி வரையில் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று வந்தார். 2008-ஆம் ஆண்டில் ஆளும் கூட்டணிக்கு எதிரான வாக்காளர்களின் உணர்வு அலைகளினால்; 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பழனிவேல் தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி பதின்மூன்றில் நான்கு மாநிலங்களை எதிர்க்கட்சிகளிடம் இழந்தது; அத்துடன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் இழந்தது. மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சுதேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்டதன் மூலம் அவரின் அரசாங்கப் பதவிகள் ஆரம்பமாகின. அதன் பின்னர் 1999 முதல் 2004 வரை மலேசிய கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சராக இருந்தார். பின்னர் அவர் குடும்ப மேம்பாட்டு நலத் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பழனிவேல் தோல்வி அடையும் வரையில் அவர் துணை அமைச்சராகத் தொடர்ந்தார். டெலிகாம் மலேசியாபழனிவேல் டோட்டோ அமைப்பின் வணிக ஆலோசகராகவும்; இருந்தார். டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒருவராகவும் இருந்தார். தனிப்பட்ட வாழ்க்கைபழனிவேலின் மனைவியின் பெயர் டத்தின் கனகம் பழனிவேலை (Datin Kanagam). இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.[2] இறப்பு2025 சூன் 17 அன்று பழனிவேல் தனது 76-ஆவது அகவையில் காலமானார்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia