கோலாலம்பூர் மருத்துவமனை
கோலாலம்பூர் மருத்துவமனை (மலாய்:Hospital Besar Kuala Lumpur; ஆங்கிலம்:Kuala Lumpur Hospital) (HKL) என்பது மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள மிகப்பெரிய பொது மருத்துவமனை ஆகும். மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்த மருத்துவமனை கோலாலம்பூர், பகாங் சாலையில் அமைந்துள்ளது. 1870-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை, உலகின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகவும்; மலேசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனையாகவும் அறியப்படுகிறது. வருமானம் நோக்கமற்ற பொதுநல நிறுவனமான கோலாலம்பூர் மருத்துவமனை; மலேசிய பொது சுகாதார அமைப்பின் முதன்மை மருத்துவமனையாகச் செயல்படுகிறது. அத்துடன் மருத்துவப் படிப்பிற்கான கற்பித்தல் மருத்துவமனையாகவும்; மற்றும் பிற மருத்துவமனைகளின் தலைமைப் பரிந்துரை மருத்துவமனையாகவும் செயல்படுகிறது. பொது150 ஏக்கர் பிரதான வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த மருத்துவமனையில் 84 மருத்துவமனைக் கூடங்கள் (வார்டுகள்); மற்றும் 2,300 படுக்கைகள் உள்ளன. இது உலகின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். இந்த மருத்துவமனையில் உள்ள படுக்கைகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வசதி குறைந்த நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன; இது பன்னாட்டு அளவில் தரமான மலிவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது.[2] புள்ளி விவரங்கள்கோலாலம்பூர் மருத்துவமனை 54 வெவ்வேறு மருத்துவத் துறைகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
முகவரிHospital Kuala Lumpur இணையத் தளம்: hkl காட்சியகம்
மேலும் காண்க* மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia