சங்கமகிராம மாதவன்
சங்கமகிராம மாதவன்[4](பிறப்பு:கிபி 1340 -இறப்பு:1425) தற்கால இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்ஞாலகுடா நகரத்திற்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கமகிராமம்|சங்கமகிராமத்தில்]] அந்தணர் குலத்தில் பிறந்தவர்.[5] இவரின் இயற்பெயர் இறைஞ்சாதப்பிள்ளி மாதவன் நம்பூதிரி. இவர் சஙகமகிராமத்தில் பிறந்ததால் இவரை சங்கமகிராம மாதவன் என்பவர். இவர் கணிதவியலில் மற்றும் வானவியலில் பல கண்டிப்புகளை நிகழ்த்தியவர்.[1] மேலும் மாதவன் வடிவவியலில் வல்லவர். இவரை கோள் வித்துவான் என்ற பெயர் பெற்றவர். கிபி 1236, 1276, 1354, 1396, 1398, 1418 ஆகிய ஆண்டுகளில் புதன், செவ்வாய், வெள்ளி, வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் இருந்த நிலை என்ன என்றும் மாதவன் கணக்கிட்டுள்ளார். வானத்தை கவனிப்பதற்கான எந்த அமைப்புகளும் உருவாகாத நேரத்தில் மாதவன் இந்த திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவரது முக்கியமான கண்டுபிடிப்புகள் இயற்கணித முக்கோணவியலின் விரிவாக்கமான அடுக்குத் தொடர், முக்கோணவியல் சார்புகள் மற்றும் நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் மற்றும் பை மற்றும் நுண்கணிதம்[1] ஆகியவற்றின் சரியான மதிப்பீடுகளை கண்டறிந்தவர். இவரது இக்கணிதக் கண்டுபிடிப்புகள் பின்னாளில் இந்தியா மற்றும் மேற்குலகில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவின. அவர் கேரளாவில் வானவியல் மற்றும் கணிதத்தின் நிறுவனராகக் கருதப்படுகிறார். மேற்கத்திய அறிஞர்கள் இவரது கணிதக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே எல்லையற்ற தொடர்களைப் பயன்படுத்தி கணித முறைகளைக் கண்டுபிடித்தார். சங்கமகிராம மாதவன் நம்பூதிரி, எல்லையற்ற தொடர்களைப் பயன்படுத்தி ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கண்டறியும் முறையை உலகில் முதன்முதலில் உருவாக்கினார். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் மேற்கத்திய அறிஞர்களான ஜேம்ஸ் கிரிகோரி, லீப்னிஸ், லம்பேர்ட் போன்றோர் இதே முறையின் மூலம் சுற்றளவை நிர்ணயிக்கும் முறையைக் கண்டுபிடித்தனர். இருப்பினும் இந்த கண்டுபிடிப்புக்கான பெருமை இன்னும் கிரிகோரி மற்றும் அவரது சகாக்களுக்கு சொந்தமான உள்ளது. படைப்புகள்பிற்கால இந்தியக் கணிதத்திற்கு வழிகாட்டியாக அமைந்த பல பங்களிப்புகளை மாதவன் செய்தார். ஒவ்வொரு நேரத்திலும் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிடும் முறையை மாதவன் கண்டுபிடித்தார்.
லக்னப்பிரகரணம் எனும் நூல் இரிங்கலக்குடா புனித ஜோசப் கல்லூரியின் தொல்லியல் ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது சங்கம்கிராமாதவனின் வாழ்க்கையும் பங்களிப்பும் என்ற ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia