சமரேந்திரநாத் ராய்
சமேரேந்திர நாத் ராய் (Samarendra Nath Roy) (பிறப்பு:11 டிசம்பர் 1906: இறப்பு: 23 சூலை 1964) ஐக்கிய அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வங்காள கணிதவியல் மற்றும் புள்ளியியல் அறிஞர் ஆவார். பன்முக பகுப்பாய்விற்காக பெரிதும் அறியப்படுகிறார். கல்வி & பணிஇவர் 1931ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இராஜா பஜார் அறிவியல் கல்லூரியில் பயன்பாட்டு கணிதவியலில் இளநிலை அறிவியியல் பட்டம் பெற்றார். பின்னர் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் தலைவரான பிரசந்தா சந்திரா மகாலனோபிசுவின் கீழ் புள்ளியியலில், பன்முக பகுப்பாய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2][3] சமேரேந்திரநாத் ராய் 1950 முதல் 1963 முடிய வடகரோலினா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[4] பின்னர் இந்தியா திரும்பி இந்தியப் புள்ளியியல் கழகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியாகச் சேர்ந்தார். குறிப்பிடத்தக்க படைப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia