சஞ்சிப் பானர்ஜி
சஞ்சிப் பானர்ஜி (Sanjib Banerjee)(பிறப்பு: நவம்பர் 2, 1961) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறார். முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.[1][2] பணிபானர்ஜி தனது பள்ளிப்படிப்பை டார்ஜீலிங்கில் உள்ள தூய பால் பள்ளியில் பயின்றார். 1983-ல் பொருளாதாரத்தில் ஆனர்சுடன் இளம் அறிவியல் மற்றும் இளங்கலைச் சட்டம் (எல். எல். பி.) பட்டத்தினை 1986-87-ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெற்றார். பானர்ஜி, தி டெலிகிராப் பத்திரிகையில் விளையாட்டுப்பிரிவு செய்தியாளராக பணியினைத் துவங்கினார். பின்னர் பானர்ஜி, 1990 நவம்பர் 21 அன்று வழக்கறிஞராகப் பணியாற்றிடப் பதிவு செய்தார். பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். 22 ஜூன் 2006 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றர். இதன் பின்னர், 31 டிசம்பர் 2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 4 ஜனவரி 2021 அன்று பதவியேற்ற பானர்ஜி நவம்பர் 17, 2021 அன்று மேகாலயா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia