அலகாபாத்தில் தனது மாணவப் பருவத்தை[10]லால் பகதூர் சாஸ்திரியின் வழிகாட்டுதலின் கீழ் கழித்தார். அரசியல் சூழலில் வளர்ந்த சின்கா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து இலக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றார். பின்னர் , பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார், ஆனால் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர தனது வேலையை விட்டுவிட்டு 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் அரசியல் கைதிகளுக்கு சட்ட உதவி திட்டங்களை ஏற்பாடு செய்தார்.
அரசியல் வாழ்க்கை
சுதந்திரத்திற்குப் பிறகு இவர் 1950இல் பீகாரிலிருந்து தற்காலிக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் காலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இளம் துருக்கியப் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார்.[11]
↑Dec 8, Lakshmi IyerLakshmi Iyer | Updated; 2007; Ist, 02:53. "A couple of mps". Mumbai Mirror. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
↑Home Page on the Parliament of India's Website]. "Member Bio Data". Loksabha. Archived from the original on 19 November 2007. Retrieved 2006-09-25. {{cite web}}: |last= has generic name (help)