சிரத்தா ஆர்யா
சிரத்தா ஆர்யா (Shraddha Arya) (பிறப்பு 17 ஆகத்து 1987) இந்தியவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவின் கள்வனின் காதலி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்தார். பாலிவுட் திரைப்படமான நிஷபத், தெலுங்குத் திரைப்படமான "கொடவா" படத்தில் வைபவ் ரெட்டியுடன் கதாநாயகியாக அறிமுகமானார். லைப் ஓகே தொலைக்காட்சியின் நாடகத் தொடர்களான மெயின் லக்ஷ்மி தேரே ஆங்கன் கி, தும்ஹாரி பாகி, ட்ரீம் கேர்ள் ஆகியவற்றில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.[1] 2017 முதல், ஜீ தொலைக்காட்சியின் சின்னபூவே மெல்லபேசு என்ற தொடரில் டாக்டர் பிரீதா அரோராவின் பாத்திரத்தை இவர் சித்தரித்து வருகிறார்.[2][3] இதே நேரத்தில் 2019ஆம் ஆண்டில், இவர் நாச் பாலியா 9இல் ஆலம் மக்கருடன் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.[4] ஆரம்ப கால வாழ்க்கைஆர்யா 17 ஆகத்து 1987 அன்று இந்தியாவின் புது தில்லியில் பிறந்தார். பின்னர், மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2005இல், இவர் விளம்பரத் துறையில் ஒரு தொழிலைத் தொடர மும்பைக்கு சென்றார்.[1] சொந்த வாழ்க்கை2015 ஆம் ஆண்டில், வெளிநாடு வாழ் இந்தியரான ஆர்யா ஜெயந்த் உடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் இணக்கத்தன்மை இல்லாத காரணமாக தங்கள் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தனர்.[5][6] ஓர் இந்தியத் தொழிலதிபரும் வழக்கறிஞருமான ஆலம் சிங் மக்கருடன் 2019இல் நாச் பாலியா என்ற ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு போது ஆர்யா தான் அவருடன் உறவில் இருப்பதாகத் தெரிவித்தார்.[7] தொழில்ஜீ தொலைக்காட்சியின் திறமை வேட்டை நிகழ்ச்சியான இந்தியாவின் சிறந்த சினிஸ்டார் கி கோஜ் மூலம் ஆர்யா தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[8] இப்போட்டியில் இவர் இரண்டாமிடம் பெற்றார். 2006ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமான கல்வானின் காதலி மூலம் நடிகர்-இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இணையாக அறிமுகமானார். அதன் பிறகு, இவர் ராம் கோபால் வர்மாவின் நிஷாப்த் என்ற படத்தில் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். மேலும் இவர் ஷாஹித் கபூருடன் பாத்சாலா என்ற படத்தில் தோன்றினார். இதே சமயத்தில் இவர் தெலுங்குத் திரைப்படத் துறையில் நுழைந்தார். நடிகர் வைபவ் உடன் கொடவா, கோதி முகா, ரோமியோ ஆகிய படங்களில் கணிசமான பாத்திரங்களில் நடித்தார். இவர் இரண்டு கன்னடத் திரைப்படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். 2011ஆம் ஆண்டில், இந்திய நாடகத் தொடரன மெயின் லக்ஷ்மி தேரே ஆங்கன் கி மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகமானார். லைப் ஓகேவின்தும்ஹாரி பாக்கியில் பாக்கியின் பாத்திரத்தில் இவரது முன்னேற்றமான நடிப்பு வந்தது. டிரீம் கேர்ள் - ஏக் லட்கி தீவானி சி -யில் ஆயிஷாவின் பாத்திரத்தில் இவர் மேலும் உயர்ந்தார். 2016 ஆம் ஆண்டில், ஏக்தா கபூர் ,ஷோபா கபூர் ஆகியோர் தயாரித்த மஸாக் மசாக் மெய் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை ஆர்யா தொகுத்து வழங்கினார். சிரத்தா ஆர்யா தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பட்டியலிட்ட தொலைக்காட்சியில் டைம்ஸ் 20 இல் மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் 2017இல் 16ஆவது இடத்திலும்,[9] 2018இல், வரிசை எண் 15லும்,[10] 2019இல், வரிசை எண் 18லும்[11] 2020இல், வரிசை எண் 14லும்[12] இடம் பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia